×

கடலாடி பள்ளி அருகே கஞ்சா விற்பனையை தடுக்க வேண்டும் பெற்றோர் வேண்டுகோள்

சாயல்குடி, டிச.6:  கடலாடி பள்ளி அருகே நடந்து வரும் கஞ்சா விற்பனையை ராமநாதபுரம் எஸ்.பி கார்த்திக் தடுத்து நிறுத்த வேண்டும் என பொதுமக்கள்,ெபற்றோர் வலியுறுத்தியுள்ளனர்.  கடலாடி தாலுகா தலைநகரமாக இருப்பதால் அனைத்து பயன்பாட்டிற்கும் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த சுமார் 50க்கும் மேற்பட்ட கிராமமக்கள் வந்து செல்கின்றனர். இங்கு 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. கடலாடி அரசு மேல்நிலைப்பள்ளி அருகே உள்ள பூதங்குடி கண்மாய், கால்வாய் போன்ற மறைவான இடம் மற்றும் கூரான்கோட்டை, கடுகுசந்தை சாலையிலுள்ள காட்டு பகுதிகளில் கஞ்சா விற்பனை ஒழிவு மறைவின்றி கடும் ஜோராக விற்பனை நடந்து வருகிறது.

மதுரை, தேனி போன்ற பிற மாவட்டங்களிலிருந்து கஞ்சாவை வாங்கி வரும் வியாபாரிகள், இப்பகுதி சிறு வியாபாரிகளிடம் விற்கின்றனர். போன் செய்தால் இருசக்கர வாகனத்தில் இளைஞர்களை தேடி வந்து விற்பனை செய்வதாக கூறப்படுகிறது. குறைந்த விலையில் அதிகமான போதை தரும் போதை வஸ்து என்பதால் இளைஞர்கள் கஞ்சாவிற்கு அடிமையாகி வருகின்றனர். கஞ்சா போதை தலைக்கேறி செய்வதறியாது நிலைக்கு தள்ளப்படுவதால், குற்றச்செயல்களில் ஈடுபடுவது அதிகரிக்கும் அபாயம் உள்ளது. எனவே எஸ்.பி கார்த்திக் பொறி வைத்து பிடித்து கஞ்சா வியாபாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவர்கள், பெற்றோர், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Marine School ,
× RELATED போலீஸ் குடியிருப்பு பகுதியில் தீ விபத்து