5வது நினைவு தினத்தை முன்னிட்டு ஜெயலலிதா சிலைக்கு அதிமுகவினர் மரியாதை

மதுரை, டிச. 6: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 5வது நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி,  மதுரை மாநகர் மாவட்ட அதிமுக சார்பில், கே.கே.நகர் ஆர்ச் அருகே உள்ள ஜெயலலிதா, எம்ஜிஆர் சிலைக்கு, மாநகர் மாவட்ட துணைச்செயலாளர் ராஜா தலைமையில், அதிமுகவினர் மாலை அணிவித்தனர். இந்நிகழ்ச்சியில், எம்ஜிஆர் மன்ற செயலாளர் எம்.எஸ்.பாண்டியன், முன்னாள் மேயர் திரவியம், மகளிரணி நிர்வாகி சண்முகவள்ளி, முன்னாள் எம்.எல்.ஏ அண்ணாத்துரை, மாநில இளைஞரணி நிர்வாகி குமார் உள்ளிட்ட கட்சியினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

 மதுரை மாநகரில் உள்ள அனைத்து வார்டுகளிலும், கடந்த 4 ஆண்டுகளாக ஜெயலலிதாவின் பிறந்தநாள், நினைவு நாள் என்றால், அந்தந்த பகுதியில், அவரின் படத்திற்கு மாலை அணிவித்து, ஒலி பெருக்கி மூலம் அதிமுக கட்சி மற்றும் ஜெயலலிதா பாடல்கள் ஒலிபரப்புவர். ஆனால், நேற்று மதுரையில் எங்கும் ஒலி பெருக்கி கட்டவில்லை. ஆங்காங்கே கட்சிக்காரர்கள் ஜெயலலிதா படத்திற்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

More