ஜெயலலிதா படத்திற்கு மரியாதை

திருப்பூர், டிச. 6: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 5ம் ஆண்டு நினைவு நாள் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் எதிரே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு ஏராளமான அதிமுக தொண்டர்கள் மாலை அணிவித்தும், மலர் வளையம் வைத்தும், மலர் தூவியும் அஞ்சலி செலுத்தினர். இதில் திருப்பூர் மாநகர் மாவட்ட எம்.ஜி.ஆர்., இளைஞரணி செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏவுமான குணசேகரன் தலைமை வகித்தார். அவைத்தலைவர் பழனிசாமி, திருப்பூர் வடக்கு எம்.எல்.ஏ., விஜயகுமார் மற்றும் கட்சி நிர்வாகிகள் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

Related Stories:

More