கலெக்டர் அலுவலகம் முன்பு வாகனங்களை நிறுத்த தடை

திருப்பூர். டிச. 6: திருப்பூர் கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலில் இரண்டு, நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்த தடை செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் ஏராளாமான அரசு துறை சார்ந்த அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த அலுவலகத்தில் சுமார் 1000க்கு மேற்பட்ட பணியாளர்கள், அலுவலர்கள் பணியாற்றி வருகின்றனர். மேலும் பல்வேறு தேவைகளுக்காக ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் கலெக்டர் உள்ளிட்ட அரசு உயர் அதிகாரிகளின் கார்கள் நிற்கும் வளாகத்தில் பொதுமக்கள், போலீசார்ம், அரசு அலுவலர்கள் தங்களின் இரண்டு, நான்கு சக்கர வாகனங்களை நிறுத்தி வந்தனர்.

குறிப்பாக, மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் சாய்வுதளத்துக்கு செல்ல முடியாதபடி இரு சக்கர வாகனங்கள் நிறுத்தப்பட்டன.  இது தொடர்பாக புகார்கள் எழவே அனுமதிக்கப்படாத இடத்தில் இரு சக்கர வாகனங்களை நிறுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. தடை மீறி வாகனங்களை நிறுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென கலெக்டர் எச்சரித்துள்ளார். அதன்படி கலெக்டர்  அலுவலக முன்புற வளாகம் அருகே அதற்கான எச்சரிக்கை அறிவிப்பு பலகை அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு மேலும் இங்கு வாகனங்களை நிறுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories:

More