எச்.எம்.எஸ். தொழிற்சங்க அலுவலக திறப்பு விழா

பல்லடம், டிச. 6: பல்லடம் அருகேயுள்ள குப்புசாமிநாயுடு புரத்தில் திருப்பூர் மாவட்டத்தின் எச்.எம்.எஸ். தொழிற்சங்க அலுவலக திறப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு தலைமை சங்க செயலாளர் ஆனந்தராஜ் தலைமை வகித்தார். அலுவலகத்தை எச்.எம்.எஸ். மாநில சங்க தலைவர் ராஜாமணி திறந்து வைத்தார். இதில் மாநில அமைப்பு செயலாளர் மனோகரன், செயல் தலைவர் பழனிசாமி,மாநில துணைத் தலைவர் கணேசன், கட்டுமான அமைப்பு சாரா சங்க பொதுச்செயலாளர் கோவிந்தசாமி உள்பட பலர் பங்கேற்றனர். இக்கூட்டத்தில்  கட்டுமான அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் ஆயிரம் ரூபாய் என இருப்பதை உயர்த்தி ரூ.5ஆயிரம் வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Related Stories:

More