கஞ்சா விற்பனையை தடுக்க போலீசார் திடீர் சோதனை

திருப்பூர், டிச. 6: தொழிலாளர்கள் அதிகம் வசிக்கும் திருப்பூரில் போதை பொருட்களான பான்மசாலா, குட்கா, கஞ்சா போன்றவைகளின் விற்பனையும் அதிகரித்து வருகிறது. சிலர் தங்களது வருமானத்தின் பெரும் பகுதியை கஞ்சா உள்ளிட்ட போதை வஸ்துகளுக்கு செலவு செய்கின்றனர். கடந்த சில நாட்களாக திருப்பூர் ரயில் நிலையம் அருகே கஞ்சா விற்பனை அதிகரிப்பதாக வந்த தகவல்களையடுத்து திருப்பூர்  குமரன் நினைவகம் அருகே நேற்று சந்தேகப்படும் படியாக அமர்ந்திருந்த பெண்கள் மற்றும் ஆண்களிடம் போலீசார் சோதனை செய்தனர்.

Related Stories:

More