தந்தை இறந்த துக்கம் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை

திருமுருகன்பூண்டி, டிச. 6:   புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி தாலுகா, தினையாகுடி பகுதியை சேர்ந்தவர் அஜித் குமார் (23). இவர் திருப்பூர் போயம்பாளையம் சக்தி நகர் பகுதியில் உள்ள அபிஷேக் வாசிங் யூனிட்டில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இந்த நிலையில் தனது தந்தை தர்மலிங்கம் உடல்நிலை சரியில்லாமல் இருந்ததால் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு சொந்த ஊருக்குச் சென்றிருந்தார். ஆனால் எதிர்பாராதவிதமாக அவர் தந்தை இறந்துவிட்டார். பின்னர் 17வது நாள் காரியம் முடித்துவிட்டு நேற்று கம்பெனிக்கு வந்தார்.  அப்பா இறந்த துக்கத்தில் சோகமாகவே இருந்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று அவர் மட்டும் கம்பெனிக்கு சொந்தமான அறையில் தங்கியிருந்த போது அவருடைய நண்பர்கள் அவருக்கு போனில் அழைத்தனர். ஆனால் அஜித்குமார் போனை  எடுக்கவில்லை. இதனால் அவரது நண்பர்கள் அறைக்கு சென்று பார்த்த போது வீட்டின்  விட்டத்தில் தூக்கு மாட்டி இறந்து கிடந்தார். இதுகுறித்து அனுப்பர்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.

Related Stories:

More