மில்லில் கிளீனிங் தொழிலாளியைகத்தியால் குத்திய வாட்ச்மேன் கைது

திருமுருகன்பூண்டி, டிச. 6:  திருப்பூர், திருமுருகன்பூண்டி பகுதியில் உள்ள முருகன் காட்டன் மில்லில் திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியை சேர்ந்த சண்முகம்(22) கிளீனிங் வேலை செய்து வருகிறார். அதே கம்பெனியில் வாட்ச்மேனாக தென்காசியை சேர்ந்த முத்துராஜா(45) பணிபுரிந்தார். சம்பவத்தன்று சண்முகம், வெங்கடாச்சலம் இருவரும் துண்டு கட்டிக்கொண்டு பாத்ரூம் சென்று உள்ளனர். இதனைபார்த்த முத்துராஜா அவர்களை தகாத வார்த்தையில் திட்டி உள்ளார்.

இதுகுறித்து சண்முகம் தனது மில் உரிமையாளளிடம் போனில் புகார் தெரிவித்தார். இதனால் ஆத்திரமடைந்த முத்துராஜா வெங்காயம் வெட்டும் கத்தியை எடுத்து சண்முகத்தின் உடலில் குத்தியுள்ளார்.  இதனால் காயமடைந்த சண்முகம் அங்குள்ள மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றார். இதுகுறித்து சண்முகம் அளித்த புகாரின் பேரில் திருமுருகன்பூண்டி போலீஸ் எஸ்.ஐ ஜெயச்சந்திரன், ஏட்டு பாபு ஆகியோர் வழக்குப்பதிவு செய்து முத்துராஜை கைது செய்தனர்.

Related Stories:

More