ஊட்டியில் மாலை நேரத்தில் கடும் பனிமூட்டம்

ஊட்டி, டிச. 6:  ஊட்டியில் ேநற்று மதியத்திற்கு பிறகு பனிமூட்டம் ஏற்பட்டதால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். நீலகிரி மாவட்டம் ஊட்டி, மஞ்சூர், குன்னூர் உள்ளிட்ட பகுதிகளில்  கடந்த 2 மாதங்களாக கனமழை பெய்தது. அதன்பின், மழை குறைந்த நிலையில் கடந்த 2 நாட்களாக நாட்களுக்கும் மேலாக காலை நேரங்களில் நீர்பனிப்பொழிவு காணப்படுகிறது. விடுமுறை தினமான நேற்று ஊட்டியில் காலை முதல் நல்ல வெயிலான காலநிலை நிலவியது. இதனால், ஊட்டியில் உள்ள தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா உள்ளிட்ட சுற்றுலா தளங்களில் கூட்டம் காணப்பட்டது. மதியத்திற்கு பிறகு வெயில் குறைந்து பனிமூட்டமான காலநிலை நிலவியது. இதனால், குளிர் காணப்பட்டது. நகரில் நடமாடிய பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வெம்மை ஆடைகள் அணிந்தபடியே நடமாடினார்கள்.

Related Stories: