நீலகிரி மாவட்டத்தில் 9.77 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி

ஊட்டி, டிச. 6:  நீலகிரி மாவட்டத்தில் இதுவரை இரு தவணைகளும் சேர்த்து 9.77 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தை பொருத்த வரை கொரோனா தடுப்பூசி போடும் பணிகளை விரைந்து மேற்கொள்ள வசதியாக வாரம் தோறும் வியாழன், சனிக்கிழமைகளில் மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்படுகின்றன. நேற்று முன்தினம்  13வது கட்ட முகாம் நடந்தது.

நீலகிரி மாவட்டத்தில் ஆரம்ப சுகாதார நிலையங்கள், மருத்துவமனைகள், பொது இடங்கள், சுற்றுலா தலங்கள் உட்பட 299 மையங்களில் நடைபெற்றது. இதில், பொதுமக்கள் மிகுந்த ஆர்வமுடன் பங்கேற்று தடுப்பூசி செலுத்தி கொண்டனர். இதில் முதல் தவணை 719 பேருக்கும், 2வது தவணை 11 ஆயிரத்து 328 பேருக்கும் என மொத்தம் 12 ஆயிரத்து 047 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

 மாவட்டத்தில் இதுவரை 5 லட்சத்து 18 ஆயிரத்து 416 பேருக்கு முதல் தவணையும், 4 லட்சத்து 59 ஆயிரத்து 378 பேருக்கு 2வது தவணை என மொத்தம் 9 லட்சத்து 77 ஆயிரத்து 794 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு உள்ளது. 2வது தவணையும் ஏறக்குறைய 86 சதவீதத்திற்கு மேல் செலுத்தப்பட்டுள்ள நிலையில் டிசம்பர் இறுதிக்குள் இரு தவணை தடுப்பூசிகளும் முழுமையாக செலுத்தப்பட்டு விடும் என எதிர்பார்க்கப்படுகிறது என சுகாதாரத்துறை ெதரிவித்துள்ளது.

Related Stories: