வெள்ளக்கிணர் பகுதியில் 100 பேர் திமுகவில் இணைந்தனர்

பெ.நா.பாளையம், டிச.6: கோவை அருகே உள்ள வெள்ளகிணர் பகுதியில் 100 பேர் தி.மு.க.வில் இணைந்தனர். துடியலூர் பகுதி  திமுக அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் பகுதி பொறுப்பாளர் அருள்குமார் முன்னிலையில் மாநகர் மேற்க்கு மாவட்ட பொறுப்பாளர் பையா கவுண்டர் தலைமையில் துடியலூர் உருமாண்டம்பாளையம் பகுதியில் இருந்து மாற்று கட்சியினர் மற்றும் புதிதாகவும் 100 பேர் தங்களை தி.மு.கவில் இணைத்துக் கொண்டனர். புதிதாக இணைந்தவர்களை பையா கவுண்டர் மற்றும் அருள்குமார் ஆகியோர் கட்சி துண்டு அணிவித்து வரவேற்றனர்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் விஜயகுமார், பொறுப்பு குழு உறுப்பினர் வெநா பழனியப்பன், வட்ட செயலாளர் சண்முகம், தகவல் தொழில் நுட்ப பிரிவு ஜெயராமன், கார்த்தி இளைஞர் அணி தினகரன், அசோக்குமார், குழந்தைவேலு, மதன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories:

More