மழைநீர் அகற்றம்

கோவை, டிச.6: கோவை அவினாசி ரோடு மேம்பாலத்தின் கீழ் பகுதியில் தேங்கிய மழை நீரால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டதை தொடர்ந்து சி.ஆர்.ஐ பம்பு நிறுவனத்தின் சமூக பொறுப்புணர்வு திட்டத்தின் கீழ் மழை நீர் அகற்றும் பணி நடந்தது. 5 வாகனங்கள் நகரின் முக்கிய பகுதிகளுக்கு சென்று சீரமைப்பு பணி மேற்கொண்டது. 4 வாகனங்கள் அவினாசி ரோடு மேம்பாலத்தின் கீழ் தேங்கிய 43 லட்சம் லிட்டர் மழை நீர் அகற்றப்பட்டது. சத்தியமங்கலம் கரட்டு மேடு பகுதியில் 8 லட்சம் லிட்டர் மழை நீர் அகற்றப்பட்டது. மாவட்ட நிர்வாகம், மாநகராட்சியுடன் சி.ஆர்.ஐ நிறுவனம் சிறப்பாக சேவை செய்தது என அதன் துணை தலைவர் சவுந்திரராஜன் தெரிவித்தார்.

Related Stories:

More