மண் வளம் மீட்க கோரிக்கை

கோவை, டிச.6: ஈஷா நிறுவனர் சத்குரு ஜகி வாசுதேவ் வெளியிட்ட அறிக்ைகயில்,‘‘விவசாயம் செய்ய மண்ணில் குறைந்தபட்சம் 3 சதவீதம் கரிம பொருட்கள் ேதவை. மண் அழிவை நோக்கி போய் கொண்டிருக்கிறது. மண் வளத்தை மீட்க கான்சியஸ் பிளான்ட் இயக்கம் விரைவில் துவக்கப்படும். பருவ மழை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகள் தான் பெரிய பிரச்னையாக உள்ளது. மண் வளம் இழந்தால் இதை விட பெரிய பாதிப்பு ஏற்படும். பல்லுயிர்களை காக்க முக்கியத்துவம் தரவேண்டும். கார்பன் வெளியீட்டை குறைப்பதில் மண் முக்கிய பங்காக இருக்கிறது.

அதிக தண்ணீரை ேசமிக்கும் மண் அனைத்து உயிர்களுக்கும் ஆதாரமாக உள்ளது. 39 இன்ச் வரையுள்ள மேல் மண்ணில் தான் 87 சதவீத உயிர்கள் வாழ மூலமாக உள்ளது’’ என்றார். வெள்ளம் தேங்கிய பகுதியில் அமைச்சர் பார்வை கோவையில் நேற்று முன்தினம் மாலை பெய்த கன மழை காரணமாக அவினாசி ரோடு  மேம்பாலம் அடியில் தண்ணீர் குளம்போல் தேங்கி, போக்குவரத்து  பாதிக்கப்பட்டது. அந்த இடத்தை மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி  நேற்று பார்வையிட்டார். அருகில், மாவட்ட கலெக்டர் சமீரன், மாநகராட்சி  கமிஷனர் ராஜகோபால் சுன்கரா மற்றும் பலர் உள்ளனர்.

Related Stories: