ஈரோடு மாவட்டத்தில் சட்டக்கல்லூரி அமைக்க வேண்டும்

ஈரோடு,  டிச. 6: ஈரோடு மாவட்டத்தில் சட்டக்கல்லூரி அமைக்க வலியுறுத்தி காங்கிரஸ்  வழக்கறிஞர் பிரிவு சார்பில் கிழக்கு தொகுதி எம்எல்ஏ திருமகன்  ஈவெராவிடம் மனு அளிக்கப்பட்டது. இது குறித்து தமிழ்நாடு காங்கிரஸ்  கமிட்டியின் வழக்கறிஞர் பிரிவின் மாநில செயலாளர் ராஜேந்திரன், ஈரோடு  கிழக்கு தொகுதி எம்எல்ஏ திருமகன் ஈவெராவிடம் கோரிக்கை மனு வழங்கினர்.  அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது: சென்னை உயர்நீதிமன்ற சர்க்யூட்  பென்ச் கோவையில் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஈரோடு மாவட்டத்தில்  சட்டக்கல்லூரி அமைத்து, இங்குள்ள மாணவர்களுக்கு சட்டம் படிப்பதற்கான  வாய்ப்பு ஏற்படுத்த வேண்டும். தமிழகத்தில் வழக்கறிஞர் சேமநல நிதி ரூ.7.5  லட்சம் வழங்கப்படுகிறது. இதனை, ரூ.20 லட்சமாக உயர்த்தி வழங்க தமிழக  முதல்வரிடம் வலியுறுத்த வேண்டும். கடந்த காங்கிரஸ் ஆட்சியில்  வழக்கறிஞர்களுக்கு டோல்கேட்டுகளில் வழங்கப்பட்ட இலவச அனுமதியை மீண்டும்  வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஈரோடு மாவட்ட நீதிமன்றத்தில்  வழக்கறிஞர்களுக்கு கூடுதல் அலுவலகம் அமைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். வழக்கறிஞர்கள், வழக்குக்கு வருவோர் வாகனங்களை நிறுத்த இடவசதி செய்து,  சிசிடிவி கேமரா அமைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.இவ்வாறு அந்த மனுவில் தெரிவித்துள்ளார்.

Related Stories: