கஞ்சா விற்ற 7 பேர் கைது எஸ்பி உத்தரவால் போலீஸ் அதிரடி வேலூர் மாவட்டத்தில் ரெய்டு

ேவலூர், டிச.6: வேலூர் மாவட்டத்தில் கஞ்சா வியாபாரிகளை பிடிக்க எஸ்பி உத்தரவால் போலீசார் தீவிர ரெய்டு நடத்தி வருகின்றனர். அதன்படி நேற்று 7 பேர் கைது செய்யப்பட்டனர். வேலூர் மாவட்டத்தில் சமீபத்தில் நடந்த கொலை, கொள்ளை வழக்கில் குற்றவாளிகளாக இளம் வயது வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களுக்கு அடிமையாகி குற்றச் செயலில் ஈடுபடுவது தெரியவந்தது. தற்போது புதிதாக பொறுப்பு ஏற்றுள்ள எஸ்பி ராஜேஷ் கண்ணன் வேலூர் மாவட்டத்தில் கஞ்சா பழக்கத்தை முற்றிலும் தடுக்க வேண்டுமென இன்ஸ்பெக்டர்களுக்கு உத்தரவிட்டார். மேலும் கஞ்சா நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளில் தீவிரமாக கண்காணிக்க குழு அமைத்து கஞ்சா வியாபாரிகளை கைது செய்ய வேண்டும் என உத்தரவிட்டார்.

இந்நிலையில், வேலூர் வடக்கு இன்ஸ்ெபக்டர் ெசந்தில்குமார், எஸ்.ஐ குப்பன் மற்றும் போலீசார் நேற்று காலை சைதாப்பேட்டை பகுதியில் திடீர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள திருமண மண்டபம் அருகே 4 பேர் நின்றிருந்தனர். அவர்கள் போலீசார் வருவதை கண்டு தப்பி ஓடினர். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவர்களை சுற்றி வளைத்து பிடித்தனர். இருப்பினும் ஒருவர் தப்பியோடிவிட்டார். பிடிபட்ட 3 பேரும் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்தனர். அவர்களிடம் நடத்திய சோதனையில் அவர்களது பாக்கெட்டில் 200 கிராம் கஞ்சா இருப்பது தெரியவந்தது. விசாரணையில் அவர்கள் சைதாப்பேட்டையை சேர்ந்த முகமதுசுபேர் (21), முகமதுசித்திக்(20), சாயித்சாகல்(20) என்பதும் கஞ்சா விற்பவர்கள் என்பதும் தெரிந்தது. அவர்களை போலீசார் கைது செய்தனர்.

அதேபோல், வேலூர் சைதாப்பேட்டை குப்புசாமி பள்ளி அருகே கஞ்சா விற்க முயன்ற விக்னேஷ்குமார்(24) என்பவரை கைது செய்தனர். தப்பியோடிய அதேபகுதியை சேர்ந்த யுவராஜ் என்பவரை தேடிவருகின்றனர். அதேபோல் குடியாத்தம் அடுத்த ராஜாகோவில் பகுதியில் குடியாத்தம் டவுன் இன்ஸ்பெக்டர் லட்சுமி மற்றும் போலீசார் நேற்று சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட அதே பகுதியை சேர்ந்த பூபதி(21), மனோஜ்(21), தட்சிணாமூர்த்தி(22) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும் விற்பனைக்காக வைத்திருந்த 250 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Related Stories: