கலசபாக்கம் அருகே படம் உண்டு ெபாழுது போக்கும் இடமாக மாறிய செய்யாற்று தடுப்பணை ஆர்வத்துடன் ரசித்து செல்லும் பொதுமக்கள்

கலசபாக்கம், டிச.6: கலசபாக்கம் அருகே பொதுமக்களின் பொழுது போக்கும் இடமாக ெசய்யாற்றின் தடுப்பணை காட்சியளிக்கிறது. இதனால் அவ்வழியாக செல்லும் பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்து ரசித்து செல்கின்றனர்.

கலசபாக்கம் அடுத்த ஆனைவாடி கிராமத்தில் செய்யாற்றின் குறுக்கே தடுப்பனை கட்டப்பட்டு உள்ளது. வடகிழக்கு பருவமழை காரணமாக மாவட்டத்திலேயே கலசபாக்கம் வட்டத்தில் அதிகபட்சமாக பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக 11 ஆண்டுகளுக்கு பிறகு செய்யாற்றில் இரு கரையும் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. மேலும் ஆனைவாடி கிராமத்தில் செய்யாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தடுப்பனையில் ஒரு மாத காலத்திற்கு மேலாக வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் அவ்வழியாக வரும் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் பார்த்து ரசித்து வருகின்றனர். தற்போது, பொதுமக்களின் பொழுது போக்கும் இடமாக செய்யாற்றின் தடுப்பனை மாறியுள்ளது. மேலும், விடுமுறை நாட்களில் சிறுவர்கள் தடுப்பணையில் குதித்து விளையாடுவதும், மீன் பிடித்து மகிழ்வதும், பொதுமக்கள் புகைப்படம் எடுத்தும் ரசித்து வருகின்றனர்.

Related Stories: