×

பாபர் மசூதி இடிப்பு தினம் போலீசார் தீவிர கண்காணிப்பு

கடலூர், டிச. 6: ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் 6ம் தேதி பாபர் மசூதி இடிப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி கடலூர் மாவட்ட எஸ்பி சக்தி கணேசன் உத்தரவின்பேரில், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அசோக்குமார் மேற்பார்வையில் கடலூர் மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மாவட்டம் முழுவதும் உள்ள ரயில் நிலையங்களில், பயணிகளின் உடமைகளை போலீசார்  சோதனை செய்த பின்னரே செல்ல அனுமதிக்கப்பட்டனர். மேலும் நிலையங்களுக்கு வரும் ரயில்களிலும் மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் சோதனை செய்தனர். தண்டவாளங்களில் இருப்பு பாதை போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். மாவட்ட எல்லைகளில் போலீசார் சோதனை சாவடி அமைத்து தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கடலூர் பஸ் நிலையத்திலும் போலீசார் பயணிகளின் உடமைகளை மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் சோதனை செய்தனர். மாவட்டம் முழுவதும் உள்ள தங்கும் விடுதிகளில் சந்தேகத்திற்கு இடமான நபர்கள் யாராவது தங்கி உள்ளனரா என்பது குறித்தும் போலீசார் கண்காணித்தனர். மேலும் மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து வழிபாட்டுத்தலங்கள் மற்றும் அரசு அலுவலகங்களில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Tags : Babri Masjid ,demolition ,
× RELATED பாபர் மசூதி இடிப்பு, குஜராத் கலவரம்...