விழுப்புரத்தில் பஸ்சை உடைத்து தீ வைத்த 3 பேர் அதிரடி கைது

விழுப்புரம், டிச. 6: விழுப்புரம் சவிதா தியேட்டர் பேருந்து நிறுத்தம் அருகே கடந்த 3 நாட்களுக்கு முன்பு நடைபெற்ற சாலை விபத்தில் ஆட்டோ டிரைவர் பலியானார். இதனால் ஆத்திரமடைந்த அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் தனியார் பேருந்தின் கண்ணாடிகளை உடைத்து தீ வைத்தனர். இந்த சம்பவத்தால் பேருந்து முற்றிலுமாக சேதமடைந்தது. இதனால் இந்த பேருந்து போக்குவரத்தின் மேலாளர் புதுச்சேரியை சேர்ந்த லூர்துசாமி கொடுத்த புகாரின்பேரில் பேருந்தை உடைத்து சேதப்படுத்திய ரகு(40), புருஷோத்(29), பச்சையப்பன்(20), மோகன், பிரபு(36) ஆகிய 5 பேர் மீது விழுப்புரம் டவுன் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிந்து புருஷோத், பச்சையப்பன், பிரபு ஆகியோரை கைது செய்தனர்.

இந்நிலையில் விழுப்புரம்- புதுவை நெடுஞ்சாலையில் தனியார் பேருந்துகள் கோலியனூரில் இருந்து விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் வரை அதிவேகத்தில் வருவதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதனடிப்படையில் நேற்று மாலை போக்குவரத்து காவல் நிலைய ஆய்வாளர் வசந்த்குமார் தலைமையில் அதிவேகமாக வந்த 4 பேருந்துகளை பிடித்து அபராதம் விதித்தனர்.

Related Stories: