பண்ருட்டியில் வங்கி ஏடிஎம் கண்ணாடி உடைப்பு

பண்ருட்டி, டிச. 6:  பண்ருட்டியில் வங்கி ஏடிஎம் கண்ணாடி உடைக்கப்பட்டது குறித்து போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர். பண்ருட்டி சத்தியமூர்த்தி தெருவில் தேசிய வங்கி ஏடிஎம் உள்ளது. நேற்று முன்தினம் நள்ளிரவு இந்த ஏடிஎம் கதவின் கண்ணாடி மர்ம நபர்களால் உடைக்கப்பட்டிருந்தது. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதியினர் இது தொடர்பாக பண்ருட்டி காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு உடனடியாக விரைந்து சென்ற பண்ருட்டி டிஎஸ்பி சபியுல்லா மற்றும் இன்ஸ்பெக்டர் சந்திரன், சப்- இன்ஸ்பெக்டர் தீபன் ஆகியோர் ஏடிஎம்மில் இருந்த சிசிடிவி கேமராவை ஆய்வு செய்து கண்ணாடி உடைப்பு சம்பவம் குறித்து தீவிர விசாரணை செய்தனர்.இச்சம்பவம் குறித்து போலீசார் கூறுகையில், இது கொள்ளை முயற்சி இல்லை. தவறுதலாக நடந்த சம்பவம். ஏ.டி.எம் கதவு எப்போதும் திறந்து தான் இருக்கும். அதை உடைத்து உள்ளே சென்று கொள்ளை அடிக்க வேண்டிய அவசியமில்லை. யாரோ ஏடிஎம்மில் பணம் எடுத்து விட்டு வேகமாக கதவை மூடியிருக்கிறார்கள். அந்த அதிர்வில் கதவின் கண்ணாடி உடைந்துள்ளது. அந்த நபர் யார் என்று விசாரணை மேற்கொண்டு வருகிறோம் என்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

Related Stories: