கிடப்பில் அங்கன்வாடி மையம் பணி பழுதடைந்த நூலகத்தில் கல்வி பயிலும் சிறுவர்கள்

முஷ்ணம், டிச. 6:  முஷ்ணம் அருகே நந்தீஸ்வரமங்கலம் ஊராட்சியில் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. இதில் 30 சிறுவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இந்த மைய கட்டிடம் பழுதடைந்து புதிய கட்டிடம் கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகிறது. கட்டிடம் கட்டப்பட்டு முடிக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் அருகில் உள்ள பழுதடைந்த நூலக கட்டிடத்தில் சிறுவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். தற்போது சிறுவர்கள் இருக்கும் நூலக கட்டிடத்தை அகற்றி புதிய கட்டிடம் கட்ட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஏற்கனவே இருக்கும் அங்கன்வாடி கட்டிடம் கட்டி முடிக்கப்படாமல் இருப்பதால் அதனை கட்டி முடிக்கும் வரை நூலகத்தில் பயில்கின்றனர். இந்த கட்டிட பழுதால் அதிக மாணவர்களை சேர்க்காமல் குறைந்த அளவு மாணவர்கள் தான் வருகின்றனர். எனவே அரசு நடவடிக்கை மேற்கொண்டு கிடப்பில் போடப்பட்டுள்ள அங்கன்வாடி மைய கட்டிட பணியை விரைந்து முடித்து சிறுவர்கள் கல்வி பயில நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பது  பெற்றோர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Related Stories: