வட்டத்தூர் வடிகால் வாய்க்கால் ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை

முஷ்ணம், டிச. 6: முஷ்ணம் அருகே வட்டத்தூர் ஊராட்சி உள்ளது. இப்பகுதி வெட்டிகரை சாலை மெயின் ரோட்டில் பெலாந்துறை வடிகால் வாய்க்கால் சாலை வழியே செல்கிறது. இந்த சாலையின் மறுபுறம் வரதராஜ பெருமாள் ஏரி மூலம் கருங்கால் வடிகாலில் கலந்து மழைக்காலங்களில் மழைநீர் செல்கிறது. இப்பகுதி ஆக்கிரமிப்பு உள்ளதாலும், இப்பகுதி பெலாந்துறை வடிகால் வாய்க்கால் தூர்வாராததாலும் தார் சாலை வழியே மழைநீர் செல்கிறது. இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள், பொதுமக்கள் ஆகியோர் ஆண்டுதோறும் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். வட்டத்தூரில் இருந்து வீராணம் ஏரிக்கு செல்லும் பொதுப்பணித்துறையின் புது வாய்க்கால் உள்ளது. இந்த வாய்க்காலில் பாலம் இல்லாததால் கால்நடைகள் செல்லவும், விவசாய விளைபொருட்களை கொண்டு செல்லவும் சிரமப்படுகின்றனர். எனவே இப்பகுதியில் சிறு பாலம் அமைத்து விவசாயிகள், கால்நடை செல்ல அரசு வழிவகை செய்திட வேண்டும் என அப்பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: