டீ கடையை உடைத்து திருட முயற்சி

திருச்சி, டிச.6: திருச்சி கோட்டை ரயில்வே ஸ்டேஷன் ரோட்டில் டீக்கடை உள்ளது. நேற்றிரவு அந்த கடையின் வாசலில் உட்கார்ந்திருந்த சிறுவன் ஒருவன் அந்த கடையின் பூட்டை சிறிய ஆக்சா பிளேட்டை வைத்து அறுத்துக்கொண்டிருந்தான். அப்போது அங்கு வந்த கடையின் உரிமையாளரும், வேலை பார்த்த வாலிபர் ஒருவரும் வந்தனர். இதனை கண்ட அந்த சிறுவன் அங்கிருந்து தப்பி ஒடினான். விரட்டி சென்ற இருவரும் அவனை பிடித்தனர். இது குறித்து கோட்டை போலீசாருக்கு அவர்கள தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் அந்த சிறுவனை அழைத்துச்சென்று விசாரணை நடத்தினர். அதில் அந்த சிறுவன் பெயர் கவுதம் என்றும் அவன் தஞ்சை சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் இருந்து தப்பி வந்ததும் தெரிந்தது. இதையடுத்து கோட்டை போலீசார், தஞ்சை போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். சிறுவனை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories:

More