மக்களைத் தேடி தமிழ் மருத்துவம்

திருச்சி, டிச.6: இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதித்துறை திருச்சி மாவட்டம் சார்பில், திருச்சி, சங்கிலியாண்டபுரம் தெரசம்மாள்புரம் பங்கு ஆலயத்தில் சிறப்பு சித்த மருத்துவ முகாம் நடந்தது. திருச்சி கிழக்கு தொகுதி எம்எல்ஏ இனிகோ இருதயராஜ் தொடங்கி வைத்தார். முகாமில் ஏராளமானோர் பங்கேற்று, ஆஸ்துமா, தோல் நோய்கள், ஒவ்வாமை, முதுகு, மூட்டு கழுத்து உள்ளிட்ட அனைத்து விதமான வலிகள், சிறுநீரக மற்றும் பித்தப்பை கற்கள், சினைப்பை கட்டி, தைராய்டு, குடல் பிரச்னைகள் உள்ளிட்ட பல்வேறு விதமான நோய்களுக்கு சிகிச்சைகள் அளிக்கப்பட்டு, தேவையான மருந்து, மாத்திரைகள் இலவசமாக வழங்கப்பட்டன. மேலும், மழைகால நோய்களான, காய்ச்சல், சளி, இருமல், உடல்வலி, கொரோனா மருந்துப் பெட்டகமும் வழங்கப்பட்டன. சுமார் 400க்கும் மேற்பட்டோர் பயன் பெற்றனர். மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் காமராஜ் தலைமையில் சித்த மருத்துவர்கள் மிட்டில்டா, ஆம்ஸ்ட்ராங் உள்ளிட்டோர் முகாம் ஒருங்கிணைப்பு பணிகளை மேற்கொண்டனர்.

Related Stories: