கொங்கராயகுறிச்சியில் மழை வெள்ளம் பாதித்த பகுதிகளை ஊர்வசி அமிர்தராஜ் எம்எல்ஏ ஆய்வு

செய்துங்கநல்லூர், டிச.6:கொங்கராயகுறிச்சியில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வீடுகள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை ஊர்வசி அமிர்தராஜ் எம்எல்ஏ பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவரிடம் அப்பகுதி மக்கள் முறையிடுகையில் ‘‘ஆண்டுதோறும் பருவமழை காலங்களில் வீடுகளுக்குள் வெள்ளநீர் புகுவதால் அவதிப்படுகிறோம். இதற்கு நிரந்தரத்தீர்வு காண வேண்டும்,  ஆற்றங்கரை ஓரத்தில் பல ஆண்டுகளாக வசித்துவருவோருக்கு உடனடியாக பட்டா வழங்க வேண்டும்’’ என்றனர். இதை ஏற்றுக்கொண்ட எம்எல்ஏ, ஆய்வுக்காக உடன் வந்திருந்த அதிகாரிகளிடம் மழைக்காலங்களில் குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் உட்புகாதவாறு என்ன செய்யலாம் என்று திட்டமிட்டு நிரந்தரத் தீர்வு காண வேண்டும், அதற்கான நடவடிக்கை மேற்கொள்ள திட்ட மதிப்பீடு செய்து தருமாறு அறிவுறுத்தினார்.

இதைத் தொடர்ந்து கிளாக்குளம், வல்லகுளம், அரசர்குளம் என தொடர் மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் பார்வையிட்டு  ஆய்வு செய்தார். மேலும் வீடுகளை இழந்தோருக்கு நிவாரண உதவி வழங்கினார். அப்போது மழைக் காலங்களில் மக்களுக்கு சிறப்பாக சேவை செய்து உதவியாக இருந்த சேரகுளம் எஸ்ஐ அல்லி அரசனுக்கு பொன்னாடை போர்த்தி ஊர்வசி அமிர்தராஜ் எம்எல்ஏ கவுரவித்தார். முன்னதாக எம்எல்ஏ ஊர்வசி அமிர்தராஜ் எம்எல்ஏ கொங்கராயகுறிச்சியிலிருந்து அரசர்குளம் செல்லும் பாதையில் கருங்குளத்தில் இருசக்கர வாகனத்தில் கணவன் மனைவி குழந்தையுடன் சென்றவர்கள் நாய் குறுக்கே வந்ததால் நிலை தடுமாறி கீழே விழுந்தனர்.

இதை கண்டு பதறிய ஊர்வசி அமிர்தராஜ் எம்எல்ஏ, உடனடியாக தனது காரை நிறுத்தி அவர்களை அருகிலுள்ள கருங்குளம் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவமனைக்கு கால்வாய் பஞ்சாயத்து தலைவர் சேதுராமலிங்கம் காரில் ஏற்றி சிகிச்சைக்காக அனுப்பி வைத்தார். ஆய்வின்போது வைகுண்டம் தாசில்தார் ராதாகிருஷ்ணன், யூனியன் சேர்மன் கோமதி ராஜேந்திரன், கொங்கராயகுறிச்சி பஞ்சாயத்து தலைவர் ஆபிதா அப்துல் சலாம், கால்வாய் பஞ்சாயத்து தலைவர் சேது ராமலிங்கம், கிளார்க் பிராங்கிளின், தலையாரி ஆனந்த், மாவட்ட காங்கிரஸ் துணை பொறுப்பாளர் சங்கர், நேர்முக உதவியாளர் போஸ், ஒன்றிய கவுன்சிலர் அப்துல் கரீம், திமுக கிளைச் செயலாளர் அருள் மேயர், கொங்கராயகுறிச்சி காங்கிரஸ் தலைவர் பெருமாள், கருங்குளம் வட்டாரத் தலைவர் புங்கன், வட்டார காங்கிரஸ் நிர்வாகிகள் நயினார், சிவசுப்பிரமணியன், சித்தார்த்தன், வனிதா ஸ்டாலின், மாரிசெல்வம், ரமேஷ், கண்ணன், முத்துகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

Related Stories: