தூத்துக்குடி மாவட்டத்தில் ஜெயலலிதா நினைவுதினம் அனுசரிப்பு

தூத்துக்குடி, டிச. 6: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 5ம் ஆண்டு நினைவுதினம் தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி அதிமுகவினர், அமமுகவினர் ஜெயலலிதா சிலை மற்றும் படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தூத்துக்குடியில் தெற்கு மாவட்ட அதிமுக சார்பில்  மாவட்ட அலுவலகம் முன்பாக அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதா படத்திற்கு தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி. சண்முகநாதன் மாலை அணிவித்தும் மலர்கள் தூவியும் விளக்கேற்றியும் மரியாதை செலுத்தினார்.

இதில் மாவட்ட  அவைத்தலைவர் திருப்பாற்கடல், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் சுதாகர், அமைப்புச் சாரா ஓட்டுநர் அணி மாநில இணைச் செயலாளர் பெருமாள்சாமி, மருத்துவ அணி இணைச் செயலாளர் ராஜசேகர், ஒன்றியச் செயலாளர்கள் காசிராஜன், ஜவகர், ராஜ் நாராயணன், அழகேசன், எம்.ஜி.ஆர். இளைஞர் அணி மாவட்டச் செயலாளர்  வீரபாகு, இலக்கிய அணி மாவட்டச் செயலளார் நடராஜன், இளைஞர் பாசறை மாவட்டச் செயலாளர் தனராஜ், சிறுபான்மை பிரிவு மாவட்டச் செயலாளர்  பிரபாகர், மாணவர் அணி மாவட்டச் செயலாளர் விக்னேஷ், வக்கீல் பிரிவு மாவட்டச் செயலாளர் சேகர், விவசாய பிரிவு மாவட்டச் செயலாளர் சுதர்சன்ராஜா, மீனவர் அணி மாவட்டச் செயலாளர் டார்சன், தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்டச் செயலாளர் அருண் ஜெபக்குமார், மாவட்ட  இணைச்செயலாளர் செரினா பாக்கியராஜ், மாவட்ட  துணைச் செயலாளர்கள்  வசந்தாமணி,  சந்தனம், மாநகர பகுதி  செயலாளர்கள் பொன்ராஜ், ஜெய்கணேஷ், நட்டார் முத்து, நகர்மன்ற முன்னாள் தலைவர் மனோஜ்குமார், எம்.ஜி.ஆர் மன்ற மாவட்ட இணைச்செயலாளர் சத்யா லட்சுமணன், தென்திருப்பேரை பேரூராட்சி செயலாளர் ஆறுமுக நயினார்,  வக்கீல்கள் சுகந்தன் ஆதித்தன், கோமதி மணிகண்டன், செங்குட்டுவன்,  முனியசாமி, பகுதி இளைஞரணி செயலாளர் திருச்சிற்றம்பலம், நிர்வாகிகள்  ஜேஸ்வா அன்புபாலன், பொதுக்குழு உறுப்பினர் மாரியப்பன், வலசை வெயிலுமுத்து,  பிராங்க்ளின், அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள் டேக் ராஜா, கல்விக் குமார், சுரேஷ், ஜவஹர், தலைமைக்கழகப் பேச்சாளர் முருகானந்தம், கேஏபி ராதா,  முன்னாள் கவுன்சிலர்கள் தவசிவேல், சுடலைமணி, முபாரக் ஜான், சந்தனபட்டு, மனோகரன்,  பொன்ராஜ் அண்ணா தொழிற்சங்க போக்குவரத்துப் பிரிவு கிளை நிர்வாகிகள், உறுப்பினர்கள் என ஏராளமானோர்  பங்கேற்றனர்.

இதே போல் தூத்துக்குடியில் 30வது வட்ட அமமுக சார்பில்   முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவுதினம்  அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி 30வது வட்ட பிரதி கீதா காசிலிங்கம்  தலைமையில் அமமுகவினர் மெழுகுவர்த்தி ஏந்தி, மாலை அணிவித்து மரியாதை  செலுத்தினர். இதில் இலக்கிய அணி மாவட்டத் தலைவர் வீரபத்திரன், வர்த்தக அணி மாவட்ட துணைச்செயலாளர் உசிலை  பால்பாண்டியன், வட்டச் செயலாளர்  காசிலிங்கம், முத்துமணி வட்ட இணைச் செயலாளர் கலா, சங்கர், முரளி,  கிருஷ்ணன், சங்கரேஸ்வரி, உஷாமங்கம்மாள், ராஜா உள்ளிட்டோர் பங்கேற்று மரியாதை செலுத்தினர்.

கோவில்பட்டி: கோவில்பட்டியில் நகரச் செயலாளர் விஜயபாண்டியன் தலைமையில் அதிமுகவினர் கருப்பு பேட்ஜ் அணிந்து கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி அலுவலகத்தில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு சென்று ஜெயலலிதா சிலைக்கு மாலையணிவித்து  மரியாதை செலுத்தினர். இதில் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் சத்யா, பொதுக்குழு உறுப்பினர் ராமச்சந்திரன், எம்ஜிஆர் இளைஞரணி செயலாளர் சீனிராஜ், ஒன்றியச் செயலாளர்கள் அன்புராஜ், அய்யாத்துரை பாண்டியன், வினோபாஜி, கருப்பசாமி, யூனியன் துணை சேர்மன் பழனிச்சாமி, ஜெ. பேரவை மாவட்ட பொருளாளர் அம்பிகா வேலுமணி, ஜெ. பேரவை நகரச்செயலாளர் ஆபிரகாம் அய்யாத்துரை, வக்கீல் அணி மாவட்டச் செயலாளர் சிவபெருமாள், வர்த்தக அணி அமைப்பாளர் ராமர், விவசாய அணி மாவட்ட அமைப்பாளர் சோலைச்சாமி, ஓட்டப்பிடாரம் ஒன்றிய முன்னாள் செயலாளர் போடுசாமி, ஆவின்பால்  கூட்டுறவு சங்கத்தலைவர் தாமோதரன், பேச்சாளர் பெருமாள், முன்னாள் கவுன்சிலர் அருணாசலசாமி,  மாணவர் அணி மாவட்ட துணைத்தலைவர் செல்வகுமார், மகளிர் அணி மாவட்ட இணைச்செயலாளர் சுதா, முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் பாலமுருகன், ஜெ. பேரவை செயலாளர் செல்வகுமார், இணைச் செயலாளர் நீலகண்டன், இளைஞர் இளம்பெண்கள் பாசறை மாவட்டச் செயலாளர் கணேஷ்பாண்டியன் மற்றும் வக்கீல் சங்கர்கணேஷ், பத்மாவதி, ராசையா, துரை உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

இதேபோல் கோவில்பட்டி அருகே பாண்டவர்மங்கலத்தில் கிழக்கு ஒன்றியச் செயலாளர் அன்புராஜ் தலைமையில் நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர். இதில் ஜெ. பேரவை நகரச்செயலாளர் ஆபிரகாம் அய்யாத்துரை, அமைப்பு சாரா தொழிலாளர் அணி நகரச் செயலாளர் சிவகுருநாதன், ஜெ. பேரவை ஒன்றியச் செயலாளர் சாமிராஜ், முனியசாமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

வைகுண்டம்: வைகுண்டம்  மேற்கு ஒன்றிய அதிமுக சார்பில் வைகுண்டம் மேடைபிள்ளையார் கோயில் அருகே நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற தெற்கு மாவட்டச் செயலாளர் எஸ்.பி. சண்முகநாதன், அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதா படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மேலும் ஒரு நிமிடம் மவுன அஞ்சலி ெசலுத்தினார். நிகழ்ச்சிக்கு வைகுண்டம் மேற்கு ஒன்றியச் செயலாளர் காசிராஜன் தலைமை வகித்தனர். தெற்கு மாவட்ட அவைத்தலைவர் திருப்பாற்கடல், வைகுண்டம் நகரத் தலைவர் காசிராஜன், வக்கீல் பிரிவு மாவட்ட இணைச்செயலாளர் கருப்பசாமி, ஒன்றியச் செயலாளர்கள், விஜயக்குமார், ராஜ்நாராயணன், அழகேசன், சவுந்தரராஜன், அ.தி.மு.க நிர்வாகி ஏ.பி. சண்முகம் முன்னிலை வகித்தனர். இதில் முன்னாள் தக்கார் சுப்பையா, ஒன்றிய கவுன்சிலர் ரமேஷ், ஜெ. பேரவை ஒன்றிய பொருளாளர் அய்யனார், வார்டு செயலாளர் திருமால் மார்பன்,வைகுண்டம் அண்ணா தொழிற்சங்கத் தலைவர் லட்சுமணன், செயலாளர் மாரியப்பன், பொருளாளர் பொன்ராஜ் கிளைச்செயலாளர் பார்த்தீபன் உள்ளிட்ட நிர்வாகிகள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.

உடன்குடி  : உடன்குடி மெயின் பஜார், பஸ் நிலையம்,  சந்தையடித்தெரு, குலசேகரன்பட்டினம், மெஞ்ஞானபுரம், பரமன்குறிச்சி ஆகிய  பகுதிகளில் நடந்த நிகழ்ச்சிகளில் ஜெயலலிதா படத்திற்கு அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் ஒன்றியச் செயலாளர் தாமோதரன், நகரச்செயலாளர் கோபாலகிருஷ்ணன், ஒன்றிய  அவைத்தலைவர் மகாராஜா, முன்னாள் துணை சேர்மன் ராஜதுரை, ஜெ. பேரவை  நகரச்செயலாளர் ரங்கன், வெங்கட்ராமானுஜபுரம் பஞ்சாயத்து துணைத்தலைவர்  ராஜ்குமார், எம்ஜிஆர் மன்ற மாவட்டத் தலைவர் குணசேகரன், ஜெ., பேரவை  ஒன்றியச் செயலாளரும், நங்கைமொழி பஞ்சாயத்து தலைவருமான விஜயராஜ், ஒன்றிய பொருளாளர்  சங்கரலிங்கம், முன்னாள் பொருளாளர் சுடலை, ஜெ., பேரவை முன்னாள் செயலாளர்  சாரதி, நிர்வாகிகள் மூர்த்தி, உம்பான் மனோகரன், இன்பகரன் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

திருச்செந்தூர்: திருச்செந்தூரில் அதிமுக சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு ஒன்றியச் செயலாளர் ராமச்சந்திரன் தலைமை வகித்தார். நகரச்செயலாளர் மகேந்திரன், மாவட்ட பொருளாளர் அமலிராஜன், ஜெ. பேரவை மாவட்டத் தலைவர்  கோட்டை மணிகண்டன், ஜெ. பேரவை ஒன்றியச் செயலாளர் சுரேஷ்பாபு, ஒன்றியக்குழு  துணைத்தலைவர் ரெஜிபெர்ட் பர்னாந்து முன்னிலை வகித்தனர். இதில் எம்ஜிஆர் மன்ற ஒன்றியச் செயலாளர் மகாலிங்கம், ஒன்றிய பொருளாளர் பழக்கடை  திருப்பதி, ஒன்றிய அவைத்தலைவர் ரவிச்சந்திரன், ஒன்றிய கவுன்சிலர் நடுவூர்  செல்வம், கூட்டுறவு சங்கத்தலைவர்கள் சுந்தர், தேவராஜ், முன்னாள்  கவுன்சிலர்கள் லட்சுமணன், வடிவேல், நகர மகளிரணி செயலாளர் வேலம்மாள், மாவட்ட  பிரதிநிதி லா, சுந்தர், மங்களதாஸ், சந்தனராஜ், முனியசாமி உள்ளிட்ட  பலர் பங்கேற்று ெஜயலலிதா படத்திற்கு மலர்கள் தூவி மரியாதை செலுத்தினர்.

சாத்தான்குளம்:  சாத்தான்குளம் பகுதியில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 5வது ஆண்டு நினைவுதினம் அனுசரிக்கப்பட்டது.சாத்தான்குளம் புதிய பஸ் நிலையத்தில் ஒன்றிய, நகர அதிமுக சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு நகரச்செயலாளர் குமரகுருபரன் தலைமை வகித்தார். ஒன்றியச் செயலாளர் அச்சம்பாடு சவுந்திரபாண்டி முன்னிலை வகித்தார். இதில் மாவட்ட கவுன்சிலர் தேவவிண்ணரசி,  ஒன்றிய அவைத்தலைவர் பரமசிவபாண்டியன், ஜெ. பேரவை மாவட்ட இணைச்செயலாளர் தட்டார்மடம் ஞானபிரகாசம், ஜெ. பேரவை ஒன்றியத் தலைவர் சின்னத்துரை, செயலாளரும், புதுக்குளம் ஊராட்சித் தலைவருமான பாலமேனன், எம்ஜிஆர் மன்ற மாவட்ட இணைச்செயலாளர் பொன்பாண்டி, முன்னாள் கவுன்சிலர் கார்த்தீஸ்வரன், மாணவர் அணி ஒன்றியச் செயலாளர் ஸ்டேன்லி, ஒன்றியச் செயலாளர் சின்னத்துரை, யூனியன் கவுன்சிலர் செல்வம், எம்ஜிஆர் இளைஞர் அணி ஒன்றியச் செயலாளர் பாலகிருஷ்ணன், சொக்கன்குடியிருப்பு கூட்டுறவு கடன் சங்கத் தலைவர் பாண்டியராஜ், விவசாய அணி முன்னாள் ஒன்றியத் தலைவர் பால்துரை உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

தட்டார்மடத்தில் ஒன்றிய எம்ஜிஆர் இளைஞர் அணி சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு தலைமை வகித்த இளைஞர் அணி ஒன்றியச்   செயலாளர் பாலகிருஷ்ணன், ஜெயலலிதா படத்துக்கு மரியாதை செலுத்தினார். இதில் சொக்கன்குடியிருப்பு கூட்டுறவு கடன் சங்கத்தலைவர் பாண்டியராஜ், இளைஞர் அணி ஒன்றிய  பொருளாளர் பூல்பாண்டி, எம்ஜிஆர் மன்ற ஒன்றிய தலைவர் கார்த்தீஸ்வரன், இளைஞர் அணி ஒன்றிய  துணைச்செயலாளர் முருகன், கருவேலமுத்து, விவசாய அணி ஒன்றிய  பொருளாளர் ஜான் லாரன்ஸ், கிளை செயலாளர்கள் லிங்கத்துரை, சந்திரகுமார், செல்வன், தாமோதரன் வேலாயுதம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

மணிநகரில் பள்ளக்குறிச்சி ஊராட்சி அ.தி.மு.க.  சார்பில் முன்னாள் ஊராட்சி செயலாளர் கார்த்தீஸ்வரன் தலைமையில், ஜெயலலிதா படத்திற்கு கிளைச் செயலாளர்கள், சார்பு அணியினர் மாலை அணிவித்தனர். சாத்தான்குளம் பழைய பஸ் நிலையத்தில்  அமமுக சார்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 5ஆம் ஆண்டு நினைவு  நாள் அனுசரிக்கப்பட்டது. ஒன்றிய துணைச் செயலாளர் முருகன் தலைமையில் அவரது உருவ படத்துக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் ஒன்றிய செயலாளர்  திவாகரன், நகர செயலாளர் ஹரிதாஸ், மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணை செயலாளர் தங்கப்பாண்டி, ஒன்றிய துணைச் செயலாளர் சுரேஷ், நகர எம்ஜிஆர் மன்ற அவைத் தலைவர்  கார்மேகபாண்டியன், இளைஞரணி முருகன், கிளை செயலாளர் சண்முகசுந்தரம் வார்டு செயலாளர் துரை, தங்கம், ராஜாசேனாதிபதி, ஜேசு பாஸ்கர், பாண்டியராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Related Stories: