டிச. 25ல் கிறிஸ்துமஸ் பண்டிகை கோவில்பட்டியில் ஸ்டார், குடில்கள் விற்பனை களைகட்டியது

கோவில்பட்டி, டிச. 6: கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு கோவில்பட்டியில் ஸ்டார்கள், குடில்கள் விற்பனை களை கட்டியுள்ளது. இந்தாண்டிற்கான கிறிஸ்துமஸ் பண்டிகையை  முன்னிட்டு கோவில்பட்டி நகரில் தெற்கு பஜார், மார்க்கெட் ரோடு,  மாதாங்கோவில் தெரு, மெயின் ரோடு, கடலையூர் ரோடு, புதுக்கிராமம் போன்ற  பல்வேறு இடங்களில் உள்ள புத்தக கடை மற்றும் பேன்சி கடைகளில் ஸ்டார்கள்,  குடில்கள் விற்பனை ஜரூராக நடந்து வருகிறது.

 கிறிஸ்துமஸ் ஸ்டார்கள் ரூ.70 முதல்  ரூ.450 வரையும், மேட்டாஸ் ஸ்டார்கள் ரூ.60 முதல் ரூ.800 வரையும், பேப்பர்  ஸ்டார்கள் ரூ.10 முதல் ரூ.350 வரையும், கிறிஸ்துமஸ் மரங்கள் 1 அடி முதல் 8  அடி வரை ரூ.80 முதல் ரூ.2300 வரையும், சீரியல் எல்இடி விளக்குடன் ஸ்டார்  ரூ.160 முதல் ரூ.650 வரையும், கிறிஸ்துமஸ் ஸ்டிக்கர்கள் ரூ.60 முதல் ரூ.180  வரையும், கிறிஸ்துமஸ் வாழ்த்து சரம் ரூ.60 முதல் ரூ.350 வரையும்,  கிறிஸ்துமஸ் தாத்தா உடைகள் சிறுவர் முதல் பெரியவர்கள் வரை ரூ.250 முதல்  ரூ.1600 வரையும் விற்பனை செய்யப்படுவதாக வியாபாரிகள் தெரிவித்தனர். கொரோனா  கட்டுப்பாடு காரணமாக கடந்த இரு ஆண்டுகளாக கிறிஸ்துமஸ் பண்டிகைக்கான  பொருட்கள் விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் இந்தாண்டு  தொற்று குறைந்ததையொட்டி அவற்றின் விற்பனை களைகட்ட துவங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: