தமிழ்நாடு, புதுச்சேரி மாநில அளவிலான சிலம்ப போட்டி 15 மாவட்டங்களை சேர்ந்த 250 வீரர்கள் பங்கேற்பு

காரைக்கால், டிச.6:தமிழ்நாடு, புதுச்சேரி மாநில அளவில் நடந்த சிலம்ப போட்டியில் 15 மாவட்டங்களை சேர்ந்த 250 வீரர், வீராங்கணைகள் பங்கேற்றனர். தமிழ்நாடு, புதுச்சேரி மாநில அளவிலான காரைக்காலில் நடைபெற்றது. தமிழக, புதுச்சேரி மாநில அளவிலான சிலம்ப போட்டியில், காரைக்கால், பாண்டிச்சேரி, நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சாவூர், கடலூர் உட்பட 15 மாவட்டங்களை சேர்ந்த 250க்கும் மேற்பட்ட சிலம்ப வீரர்கள், வீராங்கணைகள் கலந்து கொண்டனர், 4 முதல் 35 வயது வரையிலானவர்கள் இதில் கலந்து கொண்டனர். ஆண்களை விட பெண்கள் அதிகம் பங்கேற்றனர்.

காரைக்கால் வி.ஆர்.எஸ் சிலம்ப அசோசியேஷன் நிறுவனர் குமார் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இப்போட்டிகளில் வெற்றிபெற்ற சிலம்ப வீரர்கள் மற்றும் வீராங்கணைகளுக்கு எம்.எல்.ஏ நாஜிம் மற்றும் காங்கிரஸ் கட்சியின் மாவட்ட செயலாளர் கருணாநிதி ஆகியோர் பரிசுகள், கோப்பைகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கி பாராட்டு தெரிவித்தனர். போட்டிகள் சிலம்பத்தில் தொடுதல் மற்றும் சிலம்பம் சுற்றுதல் தனித்திறமை, உள்ளிட்டவற்றின் கீழ் நடைபெற்றது. அதில் எடுத்த புள்ளிகளைக் கொண்டு வெற்றியாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சிலம்பப் போட்டி ஒருங்கிணைப்பாளர் குமார், தமிழகத்தை போல கல்வி, வேலைவாய்ப்பில் சிலம்பம் பயின்றவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்று புதுச்சேரி அரசுக்கு கோரிக்கை விடுத்தார்.

கத்திரிக்காய்    ரூ.100

வெண்டைக்காய்    100  

தக்காளி    70  

கொத்தவரை    80  

சுரைக்காய்    40   

புடலங்காய்    60

அவரைக்காய்    90

பாகற்காய்    80  

முருங்கைக்காய்    100

வாழைக்காய்(3)    10  

வாழைப்பூ    10

சின்ன வெங்காயம்    50.60

பல்லாரி    35, 40 50

பச்சை மிளகாய்    60  

முள்ளங்கி    ரூ.80

பூசணிக்காய்    20  

மாங்காய் (ஒட்டு)    70

உருளைக்கிழங்கு    40

கேரட்    80  

பீன்ஸ்    90

பீட்ரூட்    40 30

முட்டைக்கோஸ்    50

செளசெள    40

தேங்காய்    10, 20.

பரங்கிக்காய்    25

காலிஃப்ளவர்    100

பீர்க்கங்காய்    100

Related Stories: