வாரந்தோறும் புதன்கிழமைகளில் புகையினால் ஏற்படும் மாசு குறைக்க டூவீலர் பயன்பாட்டை தவிர்க்கவும்

நாகை, டிச.6: புகையினால் ஏற்படும் மாசு குறைக்க வாரந்தோறும் புதன்கிழமைகளில் மோட்டார் வாகனங்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என கலெக்டர் அருண்தம்புராஜ் தெரிவித்துள்ளார். காற்று மாசு, சுகாாதரத்திற்கு பெரும் சுற்றுச்சூழல் ஆபத்து என்பதும் அதனால் உலக அளவில் ஆண்டிற்கு 2 மில்லியன் மக்கள் அகால மரணம் அடைகின்றனர் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. எரிபொருள் பயன்படுத்துவதால் உருவாகும் வாகன மாசு நகரங்களில் காற்று மாசு ஏற்படுத்துவதில் பெரும் பங்கு வகிக்கிறது. வாகனங்களில் எரிக்கும் செயல்முறையின் போது வெளியேறும் கார்பன் மோனாக்சைடு, நைட்ரஜன் ஆக்சைடு, ஹைட்ரோகார்பன்கள், சல்பர் டை ஆக்சைடு மற்றம் நுண்துகள்கள் மனித சுகாதரத்திற்கு மிகவும் தீங்கு விளைவிக்கிறது. இச்சுகாரதாரக்கேடு சுவாச அமைப்பிற்கு லேசானது முதல் கடும் எரிச்சல், தலைவலி, குமட்டல், கண் எரிச்சல், நுரையீரல் திறன் குறைதல், உடல் பாதுகாப்பு நலிவடைதல் மற்றும் புற்றுநோயை உண்டாக்குகிறது. இந்த மாசுகளால் ஏற்படும் கேடுகள் மனித சுகாதரத்தை நேரடியாக பாதிக்கும் வாகனங்களிலிருந்து வெளியேறும் கார்பன் டை ஆக்சைடு பெரும் பங்கு வகித்து ஆபத்தான பசுமை இல்ல வாயுவை வெளியேற்றி கிரக பூமியை மாசுபடுத்தி பருவநிலை மாற்றத்தை உண்டாக்குகிறது. புவியை பாதுகாக்க பசுமை இல்ல வாயு வெளியேற்றத்தையும் வளிமண்டலத்திலிருந்து கார்பன் அளவை குறைக்கவும் போராடி வருகிறோம்.

எனவே தற்பொழுது முதல் 2030-ம் ஆண்டிற்குள் ஒரு பில்லியன் டன் கார்பன் வெளியேற்றத்தை குறைக்க அனைத்து குடிமக்களின் ஒத்துழைப்பு அவசியமாகிறது. தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் அதன் அனைத்து பணியாளர்கள் மற்றும் ஒப்பந்த ஊழியர்கள் மாசற்ற அலுவலக வாரம் - பயண நாள் என கடைபிடித்து தனிநபர் மோட்டார் வாகனங்களை பயன்படுத்துவது இல்லை என்று முடிவெடுக்கபட்பட்டுள்ளது. வாரிய அலுவலகத்தில் பணிபுரியும் அனைத்து வாரிய பணியாளர்களும் மற்றும் ஒப்பந்த பணியாளர்களும் வாரந்தோறும் புதன்கிழமை அன்று பொது போக்குவரத்து மூலமோ அல்லது நடந்தோ அல்லது சைக்கிள் அல்லது மின் சைக்கிள்அல்லது மின் வாகனங்களின் மூலம் அலுவலகத்திற்கு வருகிறார்கள். உடற்பயிற்சிக்காக சைக்கிள் ஓட்டுவது மற்றும் நடப்பதை ஒரு போக்குவரத்தாக பயன்படுத்தினால், உளவியல் தடைகளை எதிர்கொள்ள முடியும், மின் வாகனங்களை படிம எரிபொருளின் மூலம் இயக்கப்படும் வாகனங்களுக்கும் மாற்றாக உருவாக்கலாம், இதே போன்று பிற அலுவலகத்திற்கு செல்வோரும் இப்பசுமை முயற்சியில் இணைந்து கொள்ள வேண்டும் என தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் அழைப்பு விடுத்துள்ளது என தெரிவித்துள்ளார்.

Related Stories: