நூற்றுக்கும் மேற்பட்ட அதிமுக, தேமுதிகவினர் திமுகவில் இணைந்தனர்

நாகை, டிச.6: நாகை திமுக மாவட்ட அலுவலகத்தில் அதிமுக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளில் இருந்து விலகி திமுகவில் இணையும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. நகர செயலாளர் பன்னீர் வரவேற்றார். நாகை தெற்கு மாவட்ட பொறுப்பாளர் கவுதமன் தலைமையில் 100க்கும் மேற்பட்டவர்கள் திமுகவில் இணைந்தனர். அப்போது அவர் கூறியதாவது: வரும் உள்ளாட்சி தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற வேண்டும். திமுக சார்பில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களும் வெற்றி பெற்று சாதனை படைக்க உழைக்க வேண்டும் என்றார். கீழையூர் ஒன்றிய செயலாளர் தாமஸ்ஆல்வாஎடிசன், அவைதலைவர் சண்முகம் மற்றும் பலர் கலந்து கொண்டனர். வேதாரண்யம்: வேதாரண்யம் தாலுகா தலைஞாயிறு பழைய ஆற்றங்கரையை சேர்ந்த பொன்னுசாமி உள்பட 25க்கும் மேற்பட்டோர் அதிமுகவிலிருந்து விலகி பேரூர் திமுக செயலாளர் சுப்பிரமணியன் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். பேரூராட்சி மன்ற முன்னாள் தலைவர் ராஜேந்திரன் மற்றும் வார்டு பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories:

More