குளித்தலை தொகுதியில் ரூ.2.78 கோடியில் புதிய கட்டிடம் நலத்திட்ட உதவிகள்

குளித்தலை, டிச.6: கரூர் மாவட்டம் குளித்தலை சட்டமன்ற தொகுதியில் லாலாபேட்டை, அய்யனேரி, அய்யர்மலை, கொசூர் ஆகிய பகுதிகளில் புதிய துணை சுகாதார நிலைய பூமிபூஜை செய்தும், முடிவுற்ற புதிய கட்டிடம் கால்நடை மருந்தகம், குளித்தலை அண்ணா மண்டபத்தில் முதியோர் உதவித் தொகைக்கான ஆணைகளை வழங்கியும், இரும்பூதிப்பட்டி இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் 95 புதிய எரிவாயு இணைப்புகள், 142 குடும்பங்களுக்கு தேவையான சமையல் பாத்திரங்கள், ஆடைகள் மற்றும் முதியோர் உதவித் தொகைக்கான ஆணைகளை அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமையேற்று பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்து, நலத்திட்ட உதவிகள் வழங்கினார். மொத்தம் ரூ.2.78 கோடி மதிப்பில் புதிய கட்டிடங்கள் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினர்ர. விழாவில் கலெக்டர் பிரபுசங்கர், எம்எல்ஏக்கள் மாணிக்கம், சிவகாமசுந்தரி, இளங்கோவன் மற்றும் அரசு அதிகாரிகள், திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Related Stories:

More