கரூர் உழவர்சந்தை தோகைமலை ஒன்றியத்தில் கொரோனா தடுப்பூசி முகாம்

தோகைமலை, டிச.6: கரூர் மாவட்டம் தோகைமலை ஒன்றியத்தில் நடைபெற்ற 13வது கொரோனா தடுப்பூசி மாபெரும் சிறப்பு முகாமில் 1,977 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதில் தோகைமலை ஒன்றயங்களில் உள்ள சின்னையம்பாளையம், கழுகூர், நாகனூர், பொருந்தலூர், தோகைமலை, பாதிரிபட்டி, கல்லடை, கூடலூர், கள்ளை, புத்தூர், வடசேரி, பில்லூர், புழுதேரி, ஆர்டிமலை, ஆர்ச்சம்பட்டி, ஆலத்தூர், தளிஞ்சி, நெய்தலூர், சேப்ளாப்பட்டி, முதலைபட்டி ஆகிய 20 ஊராட்சிகளில் 44 மையங்கள் அமைக்கப்பட்டது. 20 ஊராட்சிகளில் நடந்த சிறப்பு முகாமிற்கு அந்தந்த ஊராட்சி மன்ற தலைவர்கள் தலைமை வகித்தனர். மாவட்ட நிர்வாகம் உத்தரவை அடுத்து அனைத்து ஊராட்சி மன்றங்களின் சார்பாக சிறப்பு முகாம்கள் குறித்து முன்னதாக விழிப்பணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதனால் 20 ஊராட்சி பகுதிகளில் உள்ள பொதுமக்கள் சிறப்பு முகாம்களில் கலந்து கொண்டு தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். மேலும் வீடு வீடாக சென்று தடுப்பூசி செலுத்தினர். அனைத்து ஊராட்சி மன்ற செயலர்கள், செவிலியர்கள், சுகாதாரத்துறை பணியாளர்கள், தன்னார்வலர்கள் உள்பட பொதுமக்கள் கலந்து கொண்டனர். தோகைமலை ஒன்றியத்தில் நடந்த சிறப்பு முகாம்களை ஒன்றிய ஆணையர்கள் சரவணன், மங்கையர்கரசி ஆகியோர் மேற்பார்வை செய்தனர்.

Related Stories:

More