குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலக கட்டிடத்தை பராமரிப்புபணி செய்ய கோரிக்கை

கிருஷ்ணராயபுரம், டிச.6: தொடர் மழையால் கிருஷ்ணராயபுரம் வட்டார குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகத்தில் மழைநீர் ஒழுகி கோப்புகள் வீணாகி வருவதால் கட்டிடத்தை பராமரிப்பு பணி செய்ய கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் 200க்கும் மேற்பட்ட அங்கன்வாடி மையங்கள் இயங்கி வருகிறது. இந்த அங்கன்வாடி மையங்களின் தலைமை அலுவலகம் கிருஷ்ணராயபுரம் அடுத்த மேட்டுதிருக்காம் புலியூரில் அமைந்துள்ளது. மேட்டுதிருக்காம்புலியூர் உள்ள இந்த அலுவலகம் கட்டி பல ஆண்டுகள் ஆகிறது. இதனால் கட்டிடத்தின் உறுதி தன்மையை நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது.

கடந்த வாரம் பெய்த தொடர் மழையால் அலுவலகத்தில் உள்ள கட்டிட சுவர்கள் எல்லாம் ஈரம் பட்டு இன்னும் காயாமல் உள்ளது. கட்டிடத்தின் மேல் தளத்தின் வழியாக மழை தண்ணீர் பட்டு கோப்புகள் எல்லாம் வீணாகி வருவதாக தெரிவிகின்றனர். அலுவலகத்திற்கு ஆய்வு கூட்டம் மற்றும் பல்வேறு வேலை சம்மந்தமாக அங்கன்வாடி அமைப்பாளர்கள் வந்து செல்கின்றனர். கட்டிடம் நாளுக்கு மோசமாகி வரும் நிலையில் அசம்பாவிதம் ஏதேனும் நடக்கும் முன்பு கட்டிடத்தின் உறுதி தன்மையை ஆய்வு செய்து பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: