பேரணாம்பட்டு அருகே பரபரப்பு பைக் மீது ஜேசிபி மோதி கூலித்தொழிலாளி பலி

*டிரைவரை கைது செய்யக்கோரி உறவினர்கள் மறியல்

குடியாத்தம், டிச.5: பேரணாம்பட்டு அடுத்த நவநீதம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சேட்டு(45), இவரது உறவினர் அதே பகுதியை சேர்ந்த வேலு. இருவரும் ஒரே பைக்கில் நேற்றுமுன்தினம் குடியாத்தத்தில் இருந்து மேல்பட்டி நோக்கி சென்றனர். அப்போது, வளத்தூர் அருகே சென்றபோது ஜேசிபி வாகனம், சேட்டு, வேலு இருவரும் சென்ற பைக் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இந்த விபத்தில், சேட்டு படுகாயமடைந்து ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த வேலுவை அப்பகுதி மக்கள் மீட்டு வேலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து, தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சேட்டுவின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், மேல்பட்டியில் கூலித்தொழிலாளி சேட்டுவின் உறவினர்கள் ஜேசிபி டிரைவரை கைது செய்யக்கோரி மறியலில் ஈடுபட்டனர். இதனால் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு பரபரப்பாக காணப்பட்டது. இதுகுறித்து, தகவலறிந்த மேல்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். அதன்பேரில், அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Related Stories:

More