திருவண்ணாமலை மாவட்டத்தில் அணைகள், பூங்காக்களுக்கு செல்ல வரும் 19ம் தேதி வரை தடை நீட்டிப்பு

திருவண்ணாமலை, டிச.5: திருவண்ணாமலை மாவட்டத்தில், அணைகள் மற்றும் பூங்காக்களுக்கு பொதுமக்கள் செல்ல வரும் 19ம் தேதி வரை தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, கலெக்டர் பா.முருகேஷ் தெரிவித்திருப்பதாவது: கொரோனா தொற்று பரவலை தொடர்ந்து கண்காணித்து கட்டுப்படுத்த வேண்டிய அவசியத்தை கருத்தில் கொண்டு, திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து பொழுது போக்கு பூங்காக்கள், நீச்சல் குளங்கள், அணைகளுக்கு பொதுமக்கள் செல்ல இன்று வரை ஏற்கனவே தடை விதிக்கப்பட்டிருந்தது.

கொரோனா தொற்று பரவல் இன்னும் முழுமையாக குறையவில்லை. எனவே, பொது இடங்களில் கூட்டங்கள் கூடுவதை தவிர்க்க வேண்டிய நிலை உள்ளது. எனவே பொழுது போக்கு பூங்காக்கள் மற்றும் அணைகளுக்கு பொதுமக்கள் செல்ல விதிக்கப்பட்ட தடை உத்தரவு வரும் 19ம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது.

மேலும், தொற்றுப்பரவலை கட்டுப்படுத்த பொதுமக்கள் அனைவரும் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா தொற்று முற்றிலுமாக கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: