வாலிபர் உள்பட 2 பேரிடம் கத்திமுனையில் பணம் பறித்த 2 பேர் கைது

திருச்சி, டிச. 5: திருச்சி மண்ணச்சநல்லூர் வடக்குத்தெருவை சேர்ந்தவர் விஜயகுமார் (33). இவரிடம் நேற்றுமுன்தினம் சத்திரம் அண்ணா சிலை அருகே கத்தியை காட்டி மிரட்டி ரூ.1000 பறித்து சென்ற, பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுகாவை சேர்ந்த கணேஷ்(35) என்பவரை கோட்டை போலீசார் கைது செய்தனர். இதேபோல் மேல சிந்தாமணி எஸ்எஸ் கோவில் தெருவை சேர்ந்த திருமுருகன்(43) என்பவரிடம் பூசாரி தெருவில் கத்தியை காட்டி மிரட்டி ரூ.500 பறித்த திருவானைக்கோவில் வெள்ளிக்கிழமை சாலையை சேர்ந்த கவுதம் (21) என்பவரை கோட்டை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்.

Related Stories:

More