கஞ்சா வியாபாரிகள் 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது

திருச்சி, டிச. 5: திருச்சி பாலக்கரை கெம்ஸ்டவுன் பொதுக்கழிப்பிடம் அருகே கடந்த 9ம் தேதி கஞ்சா விற்பனை செய்ததாக அதே பகுதியை சேர்ந்த குணா (எ) குணசேகரன் (51), சங்கிலியாண்டபுரம் வாட்டர் டேங்க் அருகே கஞ்சா விற்ற இளையராஜா (39) ஆகியோரை பாலக்கரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அதுபோல் 10ம் தேதி சங்கிலியாண்டபுரம் கோவில் அருகே கஞ்சா விற்ற ஏழுமலை (25) என்பவரை பாலக்கரை போலீசார் கைது செய்து சிறையிலடைத்தனர்.

தொடர்ந்து கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட 3 பேரும் பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும்படி நடந்துகொள்வதாலும், குற்றசெயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாலும் 3 பேரையும் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்ய மாநகர போலீஸ் கமிஷனரிடம் பாலக்கரை போலீசார் பரிந்துரை செய்தனர். இதை ஏற்ற கமிஷனர் கார்த்திகேயன் 3 பேரையும் குண்டர் சட்டத்தில் அடைக்க நேற்று உத்தரவிட்டார். இதற்கான உத்தரவு நகலை போலீசார் சிறையில் உள்ள 3 பேரிடமும் வழங்கினர்.

இந்தாண்டில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த 233 குற்றவாளிகளிடமிருந்து ரூ.22 லட்சம் மதிப்புள்ள கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும், திருச்சியில் கஞ்சா உள்ளிட்ட சட்ட விரோத பொருட்களை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் எச்சரித்துள்ளார்.

Related Stories: