குற்றவாளியை பிடிக்க ஓடிய தனிப்படை ஏட்டுவுக்கு நெஞ்சுவலி

திருச்சி, டிச. 5: தமிழக காவல்துறையில் ஒவ்வொரு பிரிவிலும் தனிப்படை இயங்கி வருகிறது. அதனடிப்படையில் அந்தந்த மாநகர மாவட்டங்களில் உள்ள கமிஷனர், எஸ்பி ஆகியோரின் நேரடி கட்டுப்பாட்டில் தனிப்படை இயங்கும். இந்த தனிப்படையில் இன்ஸ்பெக்டர் அல்லது எஸ்ஐ தலைமையிலான போலீசார் பணியில் இருப்பார்கள். கொலை மற்றும் கொள்ளை வழக்கில் வழக்குபதிந்து விசாரிக்கும் போலீசாருக்கு இடையே தனிப்படை போலீசார் களமிறங்கி குற்றவாளிகளை கைது செய்து போலீசாரிடம் ஒப்படைத்து வழக்கம்.

இதுபோல் திருச்சி மாநகர கமிஷனரின் நேரடி கட்டுப்பாட்டில் எஸ்ஐ தலைமையிலான தனிப்படை உள்ளது. இந்த தனிப்படை போலீசார் கடந்த சில நாட்களுக்கு முன் தென்னூர் ஆழ்வார்தோப்பில் உள்ள பழைய குற்றவாளியை கைது செய்ய சென்றனர். குற்றவாளியை நெருங்கி பிடிக்க முயற்சித்து ஓடிய போது திடீரென தனிப்படை ஏட்டு கெல்லர் ஜேக்கப் (40) என்பவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு மயங்கி விழுந்தார். இதையடுத்து உடன் இருந்த போலீசார் அவரை மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

அங்கு அவருக்கு ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுபோல் கடந்த சில மாதங்களுக்கு முன் கஞ்சா வியாபாரியை பிடிக்க முயன்ற போது, பைக்கில் இருந்த ஏட்டு சரவணன் என்பவரை இடித்து தள்ளிய நிலையில் அவர் விடாமல் காரை பிடித்து தொங்கி கொண்டு சென்று குற்றவாளியை பிடித்தார். இதில் அவரின் வலது காலில் பலத்த தீக்காயம் ஏற்பட்டு தற்போது வரை சிகிச்சையில் உள்ளார். இதையொட்டி ஏட்டு சரவணனை டிஜிபி சைலேந்திரபாபு பாராட்டி வெகுமதி அளித்தது குறிப்பிடத்தக்கது.

எல்லை காவல் படையினர் ஒரு வாரம் பயிற்சி விராலிமலை பகுதி பொதுமக்களுக்கு எச்சரிக்கை

திருச்சி, டிச. 5: இந்தோ திபெத் எல்லை காவல் படையினருக்கான துப்பாக்கி மற்றும் குண்டு, கை எறிதல் பயிற்சி நடப்பதால் வரும் 8ம் தேதி முதல் 14ம் தேதி வரை விராலிமலை அதன் சுற்று வட்டார பகுதியில் உள்ள கிராம பொதுமக்கள் மற்றும் கால்நடை மேய்ப்பவர்கள் சற்று விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என இந்தோ திபெத் எல்லை காவல் படையின் துணை ஐஜி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளார்.

Related Stories: