கொள்ளிடம் அருகே பொதுமக்களை அச்சுறுத்தி வந்த கம்பி பாலம் தடுப்பு சீரமைப்பு

கொள்ளிடம், டிச.5: கொள்ளிடம் அருகே மூன்று ஆண்டுகளாக சீரமைக்கப்படாத கம்பி பாலம் சீரமைக்கப்பட்டது. மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே மாங்கனாம்பட்டு கிராமத்திலிருந்து சந்தப்படுகை, திட்டுபடுகை, முதலைமேடு, நாதல்படுகை உள்ளிட்ட கிராமங்களுக்கு செல்லும் சாலையின் குறுக்கே சந்தப்படுகை கிராமம் அருகே தெற்குராஜன் வாய்க்கால் குறுக்கே கம்பிபாலம் கட்டப்பட்டு பாதுகாப்புக்காக இருபுறங்களிலும் தடுப்புக் கம்பிகள் அமைக்கப்பட்டிருந்தன. இக்கம்பிகள் கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு ஏற்பட்ட விபத்தால் உடைந்து கீழே விழுந்தது.

இதனால் கொள்ளிடம் ஆற்றின் கரையோரம் உள்ள 5க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள்,பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் அவதி அடைந்து வந்தனர். இந்த வழியே செல்லும்போது பள்ளி மாணவர்கள் அடிக்கடி தெற்கு ராஜன் வாய்க்காலில் விழுந்து விபத்துக்குள்ளாகி வந்தனர்.அதிகாரிகளுக்கு பல முறை கோரிக்கை விடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்ல.

இந்நிலையில் சந்தப்படுக மற்றும் கொள்ளிடம் ஆற்றின் கரையோர கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் கொள்ளிடம் ஒன்றிய குழுதலைவர் ஜெயபிரகாஷை நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்தனர். அதனைத் தொடர்ந்து ஒன்றியகுழு தலைவர் உடனடியாக நடவடிக்கை எடுத்து நேற்று ஊழியர்களை அனுப்பி அவர்கள் மூலம் பாலத்தின் இருபுறங்களிலும் தடுப்பு கம்பிகள் அமைக்கப்பட்டு சரி செய்யப்பட்டன. இதனால் கொள்ளிடம் ஒன்றிய குழு தலைவர் ஜெயபிரகாஷ் மற்றும் அதிகாரிகளுக்கு கிராம மக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

Related Stories: