கிணற்றில் தவறி விழுந்து பள்ளி மாணவன் பலி

தோகைமலை, டிச.5: கரூர் மாவட்டம் தோகைமலை அருகே கழுகூர் ஊராட்சி மேலகம்பேஸ்வரம் பகுதியை சேர்ந்தவர் ராஜசேகர் மகன் நவீன்குமார் (16). இவர் முத்தம்பட்டியில் உள்ள ஒரு பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் நவீன்குமார் தனது தோட்டத்தில் சாகுபடி செய்த பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்கு மின் மோட்டார் போடுவதாககூறி விட்டு சென்றதாக தெரிகிறது. பின்னர் நவீன்குமார் நீண்டநேரமாகியும் காணவில்லை என்பதால் இவரின் தந்தை ராஜசேகர் சென்று விவசாய தோட்டத்தில் சென்று பார்த்து உள்ளார். அப்போது தோட்டத்தில் உள்ள கிணற்றில் ஓடை சரிந்த நிலையில் இருந்ததை கண்டு ராஜசேகர் அதிர்ச்சி அடைந்து உள்ளார். இதனால் அருகில் உள்ளவர்களின் உதவியுடன் கிணற்றில் இறங்கி பார்த்தபோது நவீன்குமார் நீரில் மூழ்கி இறந்து கிடந்து உள்ளார். இதுகுறித்து ராஜசேகர் தோகைமலை காவல்நிலையத்தில் புகார் அளித்தார். வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரனை செய்து வருகின்றனர்.

Related Stories:

More