தோகைமலை பகுதியில் மதுபானங்களை பதுக்கி விற்ற 2 பெண்கள் கைது

தோகைமலை, டிச.5: தோகைமலை பகுதியில் மதுபானங்களை பதுக்கி வைத்து விற்றதாக 2 பெண்களை போலீசார் கைது செய்தனர். கரூர் மாவட்டம் தோகைமலை அருகே பொருந்தலூர் ஊராட்சி பகுதியில் டாஸ்மாக் மது பானங்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனையடுத்து தோகைமலை போலீசார் ஆய்வு மேற்கொண்டனர். இதில் சின்னரெட்டிபட்டியை சேர்ந்த சிவக்குமார் மனைவி மலர்கொடி (30) தனது பெட்டிக்கடையில் அனுமதியின்றி மதுபானங்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வது தெரிந்தது. இதேபோல் கல்லடை ஊராட்சி கல்லடை அண்ணாநகர் அன்பழகன் மனைவி சல்ஜா (33) என்பவர் தனது வீட்டின் பின்புறம் மதுபானங்களை விற்பனை செய்து வருவது தெரிந்தது. அதனைத் தொடர்ந்து மலர்கொடி மற்றும் சல்ஜா ஆகிய இருவரையும் கைது செய்து விற்பனை செய்வதற்காக பதுக்கி வைத்து இருந்த மதுபானங்களை பறிமுதல் செய்தனர்.

Related Stories:

More