நஞ்சைபுகளூரில் தையல்பயிற்சி முகாம் துவக்கம்

வேலாயுதம்பாளையம், டிச.5: கரூர் ஒன்றியம் நஞ்சை புகளூர் ஊராட்சி தவுட்டுப்பாளையத்தில் தையல் பயிற்சி முகாம் துவக்க விழா நடைபெற்றது.தமிழ்நாடு அரசின் ஊரகப் புத்தாக்கத் திட்டத்தின் மூலம் கரூர் ஊராட்சி ஒன்றியம் நஞ்சைபுகளூர் ஊராட்சி தவுட்டுப்பாளையத்தில் சமுதாய திறன் பள்ளி தையல் பயிற்சி முகாம் நடைபெற்றது. முகாம் தொடக்க விழாவுக்கு தமிழ்நாடு அரசு ஊரகத் திட்டதிறன் வளர்ப்பு அலுவலர் தமிழ் வசந்த், நஞ்சைபுகளூர் ஊராட்சி மன்ற தலைவர் மதிவாணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயல் அலுவலர் இளநங்கையரசி வரவேற்றார். முகாமில் தையல் பயிற்சி பெறுவோர் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

Related Stories:

More