கரூர் மாநகராட்சி பகுதியில் டெங்கு ஒழிப்பு பணி: கமிஷனர் ஆய்வு

கரூர், டிச.5: கரூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் டெங்கு ஒழிப்பு பணிகளை மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் ஆய்வு செய்தார். கரூர் மாநகராட்சி ஆணையராக பொறுப்பேற்றுள்ள ரவிச்சந்திரன் மாநகராட்சிக்குட்பட்ட கரூர்-கோவை ரோடு, செங்குந்தபுரம் ஆகிய பகுதிகளில் பொதுமக்களின் வீடுகளுக்கு நேரடியாகச் சென்றும் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு சென்று பொது மக்களிடம் டெங்குநோய் நேரடியாக ஆய்வு செய்தார். மேலும் பொதுமக்களிடம் மழைக்காலம் என்பதால் குடிநீரை காய்ச்சி ஆறவைத்து குடிக்க வேண்டும். வீடுகளில் பழைய தேங்காய் மட்டைகள், சிரட்டைகள், டயர்கள் மற்றும் பழைய பாத்திரங்களில் தண்ணீர் தேங்கி நிற்பதை அப்புறப்படுத்தி, தண்ணீர் தேங்குவதை தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தினார். மேலும் பொதுமக்கள் கொரோனா தடுப்பூசி செலுத்தும் இடங்களில் நேரடியாக சென்று தங்களுக்கு முதல் மற்றும் இரண்டாம் தவணை தடுப்பு ஊசிகளை செலுத்திக் கொள்ள வேண்டுமென்று அறிவுறுத்தினார்.

Related Stories: