தடுப்பூசி போடாதவர்களை அனுமதிக்கக் கூடாது

தேன்கனிக்கோட்டை, டிச.5: தேன்கனிக்கோட்டை பேரூராட்சியில் வணிக வளாகங்கள், தனியார் மருத்துவமனைகள், வங்கிகளில் நோட்டீஸ் வழங்கி கொரோனா தடுப்பூசி செலுத்தாதவர்களை அனுமதிக்க தடை விதிக்க வேண்டும் என சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர். கெலமங்கலம் வட்டார மருத்துவர் ராஜேஸ்குமார் தலைமையில், மாவட்ட பூச்சியியல் அலுவலர் முத்து மாரியப்பன், உதவி மலேரியா அலுவலர் செல்வம், சுகாதார மேற்பார்வையாளர் சுந்தரம், சுகாதார ஆய்வாளர் ராமச்சந்திரன், துப்புரவு ஆய்வாளர் நடேசன் ஆகியோர் கொண்ட குழுவினர், தேன்கனிக்கோட்டை பேரூராட்சியில் வணிக வளாகங்கள், வங்கிகளில் விழிப்புணர்வு நோட்டீஸ் வழங்கினர்.

அதில்,  அனைத்து வணிக வளாகங்கள், தனியார் மருத்துவமனைகள் மற்றும் வங்கிகளில், தமிழ்நாடு பொதுச் சுகாதார சட்டத்தின் படி கொரோனா தடுப்பூசி போடாமல் நடமாடக் கூடாது. வெளியிடங்களில் மாஸ்க் அணிவது கட்டாயம். தேவையற்ற கூட்டங்களை தவிர்த்து, சானிடைசர் பயன்படுத்த வேண்டும். தடுப்பூசி செலுத்தாதவர்களை கடைகளுக்குள் அனுமதிக்க கூடாது என வலியுறுத்தி, பொதுமக்கள் மற்றும் கடை உரிமையாளர்களிடம் நோட்டீஸ் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். கடைகள், தனியார் மருத்துவமனைகள், வங்கிகளில் தடுப்பூசி செலுத்தாதவர்களை அனுமதித்தால், அபராதம் விதித்து சீல் வைக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்தனர்.

Related Stories: