ஓசூர் கால்நடை பண்ணையில் 40 கால்நடைகள் பொது ஏலம்

கிருஷ்ணகிரி, டிச.5:  ஓசூரில் உள்ள கால்நடை பண்ணையில் வரும் 22ம் தேதி 40 கால்நடைகள் பொது ஏலம் விடப்படுகிறது. இதுகுறித்து கிருஷ்ணகிரி கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:  ஓசூர் மாவட்ட கால்நடை பண்ணையில் கழிவு செய்யப்பட்ட மாட்டினங்களான கலப்பின ஜெர்சி 14, சிவப்பு சிந்தி 3, காங்கேயம் 12, ஆட்டினங்களான சேலம் கருப்பு ஆடுகள் 9, கொடியாடு 1 என மொத்தம் 40 கால்நடைகளை வரும் 22ம் தேதி காலை 10 மணியளவில் ஏலக்குழுவினர்கள் முன்னிலையில் பண்ணையின் பிரிவுகளில் பொது ஏலம் விடப்படவுள்ளது. இந்த ஏலத்தில் கலந்துகொள்ள விரும்பும் பொதுமக்கள் முன்பணமாக ₹10 ஆயிரம் மதிப்பிலான வரைவோலையை DEPUTY DIRECTOR, DISTRICT LIVESTOCK FARM, HOSUR என்ற முகவரிக்கு தேசியமயமாக்கப்பட்ட வங்கியிலிருந்து பெற்று, மாவட்ட கால்நடை பண்ணையின் துணை இயக்குநர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். மேற்படி முன்பணத் தொகையானது வங்கி வரைவோலையாக மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.

பொது ஏலம் தொடர்பான கூடுதல் விவரங்கள் தேவைப்படின், ஓசூர் மாவட்ட கால்நடை பண்ணையின் துறை இயக்குநர் அலுவலகத்தினை நேரிலோ அல்லது 04344-296832 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்ளலாம். பொது ஏலம் தொடர்பான நிபந்தனைகள் மற்றும் விவரங்கள் கால்நடை பராமரிப்புத்துறையின் அனைத்து மண்டல இணை இயக்குநர் அலுவலகங்கள் மற்றும் உதவி இயக்குநர் அலுவலகங்களின் விளம்பர பலகைகளில் ஒட்டப்பட்டிருக்கும். எனவே, பொதுமக்கள் மேற்படி ஏலத்தில் கலந்துகொண்டு பயன்பெறலாம். இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Related Stories: