தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

பாப்பாரப்பட்டி, டிச.5: பாப்பாரப்பட்டி புதிய பஸ் நிலையம் அருகே, கட்டுமான பொருட்களின் விலை உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டும், நலவாரிய செயல்பாட்டை மேம்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சிஐடியூ கட்டுமான தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட துணைத்தலைவர் கிட்டு(எ) சண்முகம் தலைமை தாங்கினார். சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் விசுவநாதன் கோரிக்கையை விளக்கி பேசினார். மாவட்ட குழு உறுப்பினர் செல்வராஜூ, சிபிஎம் பாப்பாரப்பட்டி பகுதி குழு செயலாளர் சின்னசாமி, பகுதி நிர்வாகிகள் லோகநாதன், முகிலன், செல்வராஜூ உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கட்டுமானப் பொருட்களின் மீதான ஜிஎஸ்டி வரியை குறைக்க வேண்டும்.

ஆன்லைன் மூலம் மட்டும் பதிவு செய்யாமல், நலவாரிய அலுவலகத்தில் நேரடியாகவும் வாரிய பதிவு மற்றும் புதுப்பிக்க வேண்டும். கட்டுமான தொழிலாளர் நலவாரியத்தை 2 மாதங்களுக்கு ஒருமுறை கூட்ட வேண்டும். கலெக்டர் தலைமையில் மாதந்தோறும் நலவாரிய அதிகாரிகள் பணி ஆய்வு செய்ய வேண்டும். ஒன்றிய அரசு தொழிலாளர் விரோத சட்டத்திருத்தங்களை திரும்பப் பெறவேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

Related Stories: