பட்டா மாறுதல் முகாம்

காரிமங்கலம், டிச.5: காரிமங்கலம் தாலுகா, பொம்மஅள்ளி வருவாய் கிராமத்தில், தமிழக அரசின் சிறப்பு பட்டா மாறுதல் முகாம் நடந்தது. மாவட்ட வழங்கல் அலுவலர் ஜெயக்குமார் முகாமை துவக்கி வைத்து, பொதுமக்களிடமிருந்து பட்டா மாறுதல் தொடர்பான விண்ணப்பங்களை பெற்றுக் கொண்டார். முகாமில் 10க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டு, உடனடியாக தீர்வு காணப்பட்டது. நிகழ்ச்சியில் தாசில்தார் சின்னா, துணை தாசில்தார் குமரன், வருவாய் ஆய்வாளர் மணி, விஏஓ சிவதாஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories:

More