மாநில அணிக்கான வாலிபால் போட்டி

தர்மபுரி, டிச.5: தர்மபுரி மாவட்ட சிறப்பு ஒலிம்பிக் சங்கத்தின் சார்பில் மன வளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளி ஆண்களுக்கான தமிழக வாலிபால் அணிக்கான தெரிவுப்போட்டிகள் மாவட்ட விளையாட்டரங்கில் நேற்று நடந்தது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 25க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளி வீரர்கள் கலந்துகொண்டனர். தர்மபுரி சிறப்பு ஒலிம்பிக் சங்க தலைவர் டாக்டர் சரவணன் தலைமை வகித்தார். செயலாளர் முத்துக்குமார் முன்னிலை வகித்தார். இணை செயலாளர் பாலமுருகன் வரவேற்றார். மாவட்ட இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அலுவலர் பியூலா ஜென்சுசிலா, மிட்டவுன் ரோட்டரி சங்க துணை கவர்னர் கோவிந்தராஜ், தலைவர் குமரன், செயலர் சரவணன், பொருளாளர் இளவரசன், அட்சயா பள்ளிகளின் தாளாளர் பெரியண்ணன், வெங்கடேஸ்வரா கல்வி நிறுவனங்களின் செயலாளர் ஸ்ரீபிரசாத், இன்பசேகரன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு போட்டிகளை துவக்கி வைத்தனர்.

இந்த போட்டிகளில் தேர்வு செய்யப்பட்ட 7 வீரர்கள், வரும் ஜனவரி மாதம் இறுதியில் குஜராத் மாநிலம் காந்தி நகரில் நடைபெறும் தேசிய அளவிலான மன வளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளிக்கான வாலிபால் போட்டிகளில், தமிழகத்தின் சார்பாக பங்கேற்கவுள்ளனர். ஏற்பாடுகளை சிறப்பு ஒலிம்பிக் சங்க செயலாளர் திருச்சி முத்துக்குமார், இணை செயலாளர் பாலமுருகன்,ஆகியோர் செய்திருந்தனர்.

Related Stories:

More