பிளஸ்2 மாணவி கடத்தல்

தர்மபுரி, டிச.5: கடத்தூர் அருகே ஐயம்பட்டி பகுதியைச் சேர்ந்த 17வயது மாணவி, அங்குள்ள அரசு பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார். கடந்த 30ம் தேதி வழக்கம் போல் பள்ளிக்கு சென்ற மாணவி, பின்னர் வீடு திரும்பவில்லை. உறவினர் மற்றும் தோழிகளின் வீடுகளில் தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை. இதுபற்றி மாணவியின் தந்தை கடத்தூர் போலீசில் புகார் அளித்துள்ளார். அதில், அதே பகுதியைச் சேர்ந்த தீர்த்தகிரி என்பவரின் மகன் சதீஷ் தனது மகளை கடத்திச்சென்று விட்டதாக தெரிவித்துள்ளார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories:

More