×

வடலூரில் இன்று வேலைவாய்ப்பு முகாம்

நெய்வேலி, டிச. 5:  வடலூரில் மகளிர் திட்டம் மூலம் தனியார் வேலைவாய்ப்பு முகாம் இன்று (5ம்தேதி) அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடக்கிறது. இதுகுறித்து வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் விடுத்துள்ள செய்தி குறிப்பில் குறிப்பிட்டுள்ளதாவது, கடலூர் மாவட்ட மகளிர் திட்டம் மூலம் வேலைவாய்ப்பு இல்லாத இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தித் தரும் வகையில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் இன்று(5ம்தேதி) வடலூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடக்கிறது. காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடக்கும் இந்த முகாமில் மகளிர் திட்டம் மூலம் தொழிற்திறன் பயிற்சி பெற்ற இளைஞர்களுக்கும், மாவட்டத்தில் உள்ள தொழில் கல்வி மற்றும் பொதுக்கல்வி படித்த அனைத்து இளைஞர்களுக்கும் வேலை வாய்ப்பினை ஏற்படுத்தித் தரும் வகையில் நடத்தப்பட உள்ளது.

 முகாமில் மாவட்டத்தில் உள்ள ஊரக மற்றும் நகர்ப்புறத்தில் தகுதியுள்ள ஆண், பெண் இருபாலரும் கலந்து கொண்டு பயன்பெறலாம். முகாமிற்கு வருபவர்கள் அசல் கல்வி சான்றிதழ், மதிப்பெண் பட்டியல், மாற்று சான்றிதழ், சாதி சான்று, இருப்பிட சான்று, வருமான சான்று, குடும்ப அடையாள அட்டை, ஆதார் அட்டை, இத்துடன் 2 பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, சுய விலாசமிட்ட அஞ்சல் உறையுடன் முகாமில் கலந்து கொண்டு வேலை வாய்ப்பினை பெற்று பயனடையுமாறு  கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். முகாமில் கலந்து கொள்ளும் அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும். முக கவசம், சமூக இடைவெளி கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

Tags : Vadalur ,
× RELATED சமூக வலைதளங்களில் உண்மைக்கு புறம்பான செய்தி வெளியிட்டால் நடவடிக்கை