×

ஒரு கிலோ கத்தரிக்காய் ரூ.40 தொண்டி மக்கள் அதிர்ச்சி

தொண்டி, டிச. 5:  தொண்டி காய்கறி மார்க்கெட்டிற்கு தினசரி மதுரை  மார்க்கெட்டிலிருந்து காய்கறிகள் கொண்டு வரப்படுகிறது. புரட்டாசி  மாதத்தில் உயர்ந்திருந்த காய்கறிகள் விலை சற்று குறைய துவங்கிய நிலையில்  தற்போது தொடர்மழையால் மீண்டும் உச்சத்தை எட்டியுள்ளது. தொண்டி  மார்க்கெட்டில் நேற்று ( கிலோ அளவில்) கத்தரிக்காய் ரூ.40, தக்காளி  ரூ.00, வெங்காயம் ரூ.50, முள்ளங்கி, கேரட், பீட்ரூட் ரூ.65, பச்சை மிளகாய்  ரூ.60க்கும் விற்பனையானது. மேலும் இலவசமாக கொடுக்கும் புதினா, மல்லித்தழை  ஒரு கிலோ ரூ.50 ஆக உயர்ந்துள்ளது. காய்கறிகளின் தொடர் விலையேற்றத்தால்  பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இதுகுறித்து வியாபாரிகள்  கூறியது, ‘கார்த்திகை  மாதம் என்பதால் பெரும்பாலானோர் ஐய்யப்பன் கோவிலுக்கு  மாலை போட்டுள்ள்னர். மேலும் கடந்த சில தினங்களாக தொடர் மழையால் வரத்து  குறைவாலும், காய்கறி தேவை அதிகமாக உள்ளதாலும் கொள்முதல் விலை  உயர்ந்துள்ளது’ என்றனர்.

Tags :
× RELATED துறையூர் நகரில் வேட்பாளர் அருண்நேரு ரோடு ஷோ